Kidny

Kidny

விஜயதாச ராஜபக்ஷவை பதவி விலக்கவில்லை. ஐக்கிய தேசியக்கட்சி விரட்டியடித்தது.


முன்னாள் நீதி அமைச்சராகவிருந்த விஜயதாச ராஜபக்ஷ தான் பதவி விலகவில்லை என்றும் தன்னை விலக்கிவிட்டதாகவும் கூறிக் கொள்கிறார். விலக்கிவிட் டார்கள் என்பது கெளரவ மாக இருக்கும் என்று அவர் நினைக்கிறார் போலும்.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு அவரின் உண்மை முகம் தெரியவந்த காரணத்தினால் அவரை விரட்டியடித்துவிட்டார்கள் என்பதே உண்மையாகும் என பீல்ட் மார்ஷல் அமைச் சர் சரத் பொன்சேகா தெரி வித்துள்ளார்.


களனி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ் வொன்றில் கலந்துகொண் டதன் பின்னர் ஊடகங்க ளுக்கு கருத்து தெரிவிக்கை யிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக் கையில்,
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் செயற்பாடு களை ஐக்கிய தேசியக் கட் சியினர் அனைவரும் முழு மையாக நிராகரித்தார்கள்.

அவர் முன்பே இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றார் என்பதை நான் நன்கு அறி வுறுத்தியிருந்தேன்.


நான் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளும் முன்னரேயே இவ்வாறான ஒரு விடயம் குறித்து நான் கட்சியினருக்கு தெளிவுபடுத்தியிருந் தேன். இவ்வாறான நிலையிலேயே அவருக்கு கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது.
அதேபோல் அவர் நேற்று முன்தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் பெல்லங்வில விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தார். இதன் மூலம் அவர் முன்னாள் ஜனாதிபதியுடன் கூட்டாக செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளார் என்பதை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர்.

அதனால் அவர் மீது கடந்த காலங்களில் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை மக்கள் தற்பொழுது ஆதாரத்துடனே கண்டுகொண்டுள்ளார்கள் எனத் தெரி வித்துள்ளார்.

விஜயதாச ராஜபக்ஷவை பதவி விலக்கவில்லை. ஐக்கிய தேசியக்கட்சி விரட்டியடித்தது. விஜயதாச ராஜபக்ஷவை பதவி விலக்கவில்லை. ஐக்கிய தேசியக்கட்சி  விரட்டியடித்தது. Reviewed by Madawala News on 8/27/2017 11:07:00 AM Rating: 5