tg travels

ஊழல் செய்து தப்பியோடிய தாய்லாந்து முன்னாள் பிரதமர் ஷினவத்ரா துபாயில் தஞ்சம்.


தாய்லாந்தில் இருந்து தப்பிச் சென்ற முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா டுபாய் சென்றுள்ளார். அவர் பிரிட்டன் அரசிடம் தஞ்சம் கோர முயற்சித்து வருகிறார் என்று தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

யிங்லக் ஷினவத்ரா ஆட்சியில் இருந்தபோது அரிசி கொள்முதலில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

இந்த வழக்கு அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது.

வழக்கு விசார ணைக்காக யிங்லக் கடந்த வெள்ளிக் கிழமை நேரில் ஆஜராக வேண்டும். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டது.

இதனிடையே கம்போடியா, சிங்கப்புர் வழியாக யிங்லக் ஷினவத்ரா டுபாய்க்கு தப்பி சென்றுவிட் டதாகவும் அவர் பிரிட்டன் அரசிடம் தஞ்சம் கோர முயற்சித்து வருகிறார் என்றும் தாய்லாந்து அரசின் உளவுத் துறை தெரிவித்துள்ளது.

ஊழல் செய்து தப்பியோடிய தாய்லாந்து முன்னாள் பிரதமர் ஷினவத்ரா துபாயில் தஞ்சம். ஊழல் செய்து தப்பியோடிய தாய்லாந்து முன்னாள் பிரதமர் ஷினவத்ரா துபாயில் தஞ்சம். Reviewed by Madawala News on 8/28/2017 11:48:00 AM Rating: 5