tg travels

சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தவர் மடக்கிப்பிடிப்பு. #வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சம்பவம்.


மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வட்டுவான் பிரதேசத்தில் வீட்டிலிருந்த 17 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 30 வயது ஆண் ஒருவரை  இரவு கைது செய்துள்ளதாக வாழைச் சேனைப் பொலிலார் தெரிவித்தனர்.

சிறுமி விட்டில் இருந்தபோது மாலை 6 மணியளவில் தந்தையாரை ஒருவர் கூப்பிடும் சத்தம் கேட்டு வீட்டின் வெளிவாசலுக்கு வந்த சிறுமி தந்தை
யார் வீட்டில் இல்லை" என தகவல் தெரிவித்த நிலையில் குறித்த ஆண் சிறுமியை திடீ ரென கையைப் பிடித்திழுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சித்துள்ளார்.

சிறுமி கத்தி கூச்சலிட்டதையடுத்துஅயலவர் கள் வந்ததால் சிறுமியை விட்டு விட்டு நபர்தப்பி ஓடியுள்ளார்.

இது தொடர்பாக பொலிலாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து அதே பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட் டார்.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தவர் மடக்கிப்பிடிப்பு. #வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சம்பவம். சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தவர் மடக்கிப்பிடிப்பு. #வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சம்பவம். Reviewed by Madawala News on 8/01/2017 11:32:00 AM Rating: 5