Kidny

Kidny

மீட்கபட்ட முஸ்லிம் சிறுவனின் ஜனாஸா தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது.


புத்தளம் சமீரகம என்னும் பகுதியிலுள்ள மைய்யித்துபிட்டி பள்ளிவாசல் அருகாமையிலுள்ள தோட்டம் ஒன்றிலிருந்து கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சுமார் 15 வயதுடைய முஸ்லிம் சிறுவனின் ஜனாஸா ஒன்று மீட்கப்பட்டது தொடர்பில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.


சடலமாக மீட்கப்பட்ட  சிறுவன், கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளான் என, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக, முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.


கொலையாளி நாகவில்லை சேர்ந்த (முஸ்லிம்) நபர் எனவும், குறித்த நபர் பொதுமக்களால் அடித்து பிடிக்கப்பட்டு முந்தல் பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட பின் வைத்தியாலையில் அனுமதிக்க பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


உயிரிழந்த சிறுவன் சமீரகமயை சேர்ந்த நஸார் என்பவரின் மகன் என தெரியவருகிறது.


கொலைகான காரணத்தை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
மீட்கபட்ட முஸ்லிம் சிறுவனின் ஜனாஸா தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. மீட்கபட்ட முஸ்லிம் சிறுவனின் ஜனாஸா தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. Reviewed by Madawala News on 8/21/2017 07:59:00 PM Rating: 5