Kidny

Kidny

News Just in.. கடலில் படகு கவிழ்ந்ததில் ஐந்து மாணவர்கள் உயிரிழப்பு. (video)



யாழ்ப்பாணம் - மண்டைத்தீவு கடற்பகுதிக்கு அப்பால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள 5 மாணவர்கள் உயரிழந்துள்ளனர்.

மேலும் ஒரு மாணவர் காணாமல் போயுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று பரீட்சை நிறைவந்த பின்னர் ,தினேஸ் என்ற மாணவரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக 7 மாணவர்கள் இணைந்து மண்டைத்தீவு பிரதேசத்திற்கு சென்று படகு சவாரி செய்துள்ளனர்.

பகுதியளவில் சேதமடைந்திருந்த படகொன்றிலேயே குறித்த மாணவர்கள் படகு சவாரி செய்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதன்போது , குறித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது , ஒரு  மாணவர் நீந்தி கரை திரும்பியுள்ள நிலையில் , மற்றைய ஆறு மாணவர்களில் ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடும் தினேஷ் என்ற மாணவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சடலங்கள் தற்போதைய நிலையில் , யாழ். மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் சற்றுமுன்னர் தொலைக்காட்சியில் வெளியான   Video

News Just in.. கடலில் படகு கவிழ்ந்ததில் ஐந்து மாணவர்கள் உயிரிழப்பு. (video) News Just in..  கடலில்  படகு  கவிழ்ந்ததில் ஐந்து மாணவர்கள் உயிரிழப்பு. (video) Reviewed by Madawala News on 8/28/2017 04:06:00 PM Rating: 5