Kidny

Kidny

கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதி சின்னையா, இலங்கை கடற்படையின் புதிய கட்டளைத் தளபதியாக நியமனம்.


இலங்கை கடற்படையின் புதிய கட்டளைத் தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

ரியல் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா இதுவரை இலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக கடமையாற்றனைார்.

இந்நிலையில் இலங்கை கடற்படையின் சிரேஷ்ட உறுப்பினரான இவர் 21 வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை இலங்கை கடற்படையின் தளபதியாக இருந்த ரவீந்தர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதி சின்னையா, இலங்கை கடற்படையின் புதிய கட்டளைத் தளபதியாக நியமனம். கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதி சின்னையா, இலங்கை கடற்படையின் புதிய கட்டளைத் தளபதியாக நியமனம். Reviewed by Madawala News on 8/18/2017 10:47:00 AM Rating: 5