tg travels

ஸ்ரீ லங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் 49 சதவீதமான சொத்துக்களை மாற்றிடும் முயற்சியில் ஜப்பானிய விமான நிறுவனம்..


தேசிய விமான நிறுவனமான ஸ்ரீ லங்கா எயர்லைன்ஸ் நிறுவனத்தின் 49 சதவீதமான சொத்துக்களை மாற்றிடும் முயற்சியில் ஜப்பானிய விமான நிறுவனம் உள்ளிட்ட மூன்று விமான நிறுவனங்கள் தற்போது இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவ தாக அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித் துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித் ததாவது,

ஜப்பானிய விமான நிறுவன அதிகாரிகள் ஏற்கனவே இலங்கைக்கு
விஜயம் செய்துள்ள நிலையில், அவர் கள் பிரதமரைச் சந்தித்து பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் இது சம்பந்தமாக வேண்டிய தகவல்களைக் கேட்டுள்ளதுடன் நாம் வெளிப்படுத்தப்படாத ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவே விரும்புகின்றோம்.

 அதன் பின்னரே, அதனை மேலும் அனுசரித்துப் போகும் வகையில் வேண்டிய தகவல்களை சமர்ப்பிக்கவுள்ளோம். ஏனைய இரண்டு விமான நிறுவனங்
கள் பற்றி வாய் திறக்காத அமைச்சர், குறித்த பங்காண்மைத் துவம் நிச்சயமாக பொது தனியார் பங்காண்மைத்துவமொன்றாகவே இருக்குமெனவும், சம உரிமைகள் உள்ள சாதாரண பங்குகளைக் கொண் டிருக்கும் வகையில் நாம் 49 சதவீத சொத்துக்களை மாற்றிக்கொள்ள உத்தேசித்துள்ளோம்.

மீதியாகவுள்ள 51 சதவீதமான சொத்து அரசின் வசமே இருக்கும். விமான நிறுவன வியாபாரத்தை முகாமை செய்வதில் நாமே சிறந்தவர்ளென்ற எண்ணம் எமக்கில்லாதபடியால் நிறுவனத்தின் முழு முகாமைத்துவத்தையும் கையளிக் கவே விரும்புகின்றோம்.

சம உரிமைகள் உள்ள சாதாரண பங் குகள் விடயத்தில் பிரச்சினைகள் எழுமிடத்து நாம் ஏனைய விருப்பத் தெரிவுகளை மேற்கொள்வோம் எனவும் அவர் மேலும் கூறினார்.

ஸ்ரீ லங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் 49 சதவீதமான சொத்துக்களை மாற்றிடும் முயற்சியில் ஜப்பானிய விமான நிறுவனம்.. ஸ்ரீ லங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் 49 சதவீதமான சொத்துக்களை மாற்றிடும் முயற்சியில் ஜப்பானிய விமான நிறுவனம்.. Reviewed by Madawala News on 8/08/2017 12:29:00 PM Rating: 5