Ad Space Available here

STF - பாதாள குழு மோதல் சம்பவத்தின் முழு விபரங்கள் வெளியாகின..


(எம்.எப்.எம்.பஸிர்)

நீர்கொழும்பு குரண சந்திக்கு அருகில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிப் பிரயோகம் மூலம் பிடிபட்ட ஆயுதக் குழு உறுப்பினர்களிடம் நீர்கொழும்பு பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆயுதக் குழு வின் உறுப்பினர்கள் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் ஏனைய இருவரையும் ஏழு நாட்கள் விசேட பொலிஸ் காவலில் வைத்து, நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப் பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வூட்லர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சிறப்பு விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.

பாரிய போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் பாதாள உலகத் தொடர்புகள் கொண்டவர்க ளாக குறித்த நபர்கள் வலம் வந்துள்ளமை தொடர் பில் தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ள பொலிஸார், அதிரடிப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மூலம் பிடிக்கும்போது பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்றுக்காக இவர்கள் ஒன்றிணைந்து சென்றுகொண்டிருந்திருக்க வேண்டும் எனவும் சந்தேகிக்கின்றனர்.

 இந்த நிலையில் காயமின்றி கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸார் நேற்று மாலை அனுமதி பெற்றுக்கொண்டுள்ளனர்.

பொலிஸார் முன்னெடுத்துள்ள ஆரம்ப கட்ட விசாரணைகளில் இந்த ஆயுதக் கும்பலில், தெற்கின் பிரபல பாதாள உலகத் தலைவனாக கருதப்படும் களுத்துறை சிறைச்சாலை பஸ்வண்டி மீதான தாக்குதலின் சூத்திரதாரியான டுபாயில் உள்ள மாகந்துரே மதூஷ் எனப்படும் பாதாள உலகத் தலைவனின் சகா ஒருவரும் உள்ளடங்குவது கண்டறியப்பட்டுள்ளது.


குறித்த சகா, அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து தற்போது கொழும்பு தேசிய வைத்தி யசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகின்றது.

இந் நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ள ஆயுதக் கும்பலிடமிருந்து அவர்கள் பயணித்த வேன், இரு t 56 ரக துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி, 56 தோட்டாக்கள், 3 மெகஸின்கள், 10 கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள், 7 போலி வாகன இலக்கத் தகடுகள் உள்ளிட்டவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நேற்றுமுன்தினம் மாலை 5.15 மணியளவில், திட்டமிட்ட குற்றம் ஒன்றினை அரங்கேற்ற குழுவொன்று வேனொன்றில் பயணித்துக் கொண்டி ருப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையின ருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

சிலாபம் பகுதியில் இருந்து நீர்கொழும்பு நோக்கி இந்தக் குழு பயணிப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப் பெற்றி ருந்த தகவலுக்கு அமைய, ஜீப் வண்டியொன்றில் குறித்த வேனை பின் தொடர்ந்த அதிரடிப் படை யினர் நீர்கொழும்பு குரண சந்தியருகில் வைத்து வேனுக்கு குறுக்காக ஜீப் வண்டியை நிறுத்தி வேன் முன்னோக்கி செல்வதை தடுத்தனர். இதனையடுத்து அந்த வேனை சுற்றிவளைத்த அதிரடிப் படையினர் வேனை சோதனையிட முயற் சித்தபோது, வேனில் இருந்து அதிரடிப்படையினரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட் டுள்ளது.

இந் நிலையில் உடன் செயற்பட்ட படை யினர் பதில் தாக்குதலுடன் வேனை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதன்போது வேனில் நால்வர் இருந்ததுடன் அவர்களில் இருவர் அதிரடிப் படையினரின் தாக்குதலில் காயமடைந்தனர்.

காயமடைந்த இருவரும் உடனடியாக சீதுவை வைத்தியசாலைக்கு கொண் டுசெல்லப்பட்டு பின்னர் அவர்கள் இருவரும் வட கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டனர்.

 பின்னர் அதில் ஒருவர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகரவின் மேற்பார்வையில் நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் அனுர சில் வாவின் ஆலோசனைக்கு அமைவாக நீர்கொழும்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரி சோதகர் உதயகுமார வூட்லரின் தலைமையின் கீழான குழுவினர் முன்னெடுத்துள்ள சிறப்பு விசா ரணைகளில் பல்வேறு தகவல்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. குறிப்பாக ஆயுதக் குழு பயணித்த வேனின் பதிவு தொடர்பில் போலியான ஆவணங்களும் இலக்கத் தகடுகளுமே இருந்துள்ள நிலையில் வேனின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க தனியான விசாரணைகள் இடம்பெறுகின்றன.

அத்துடன் இந்த ஆயுதக் குழுவில் இருந்த நால் வரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

28 வய துடைய பியகமவைச் சேர்ந்த சம்பிக்க குமார ஜய துங்க, சீதுவையைச் சேர்ந்த 41 வயதுடைய வஜிர குமார, தெல்தெனியவைச் சேர்ந்த 40 வயதுடைய ஜனக அருண சாந்த ராகமவைச் சேர்ந்த 31 வயது டைய தரிந்து மதூஷ் ஆகியோரே அந்த வேனில் வந்த ஆயுதக் கும்பலில் இருந்தவர்களாவர். இவர் களில் சம்பிக்க குமார ஜயதுங்க ராகம வைத்தியசா லையிலும், மாகந்துரே மதூஷின் சகாவான வஜிர குமார ஆபத்தான நிலையில் தேசிய வைத்தியசா லையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜனக அருண சாந்த என்பவர் இராணுவத்தில் இருந்து தப்பி வந்த முன்னாள் இராணுவ வீரராவார். இந்நிலையில் பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணைகளில், குறித்த ஆயுதக் குழுவானது பாரிய கொள்ளை அல்லது கொலை ஒன்றினை மேற்கொள்வதற்குத் தயாராக திட்டமிட்டு ஒன்றி ணைந்து பயணித்துள்ளமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

அத்துடன் இந்தக் குழு பாரிய போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்பு பட்டுள்ளமைக்கான தகவல்களையும் விசாரணை களில் பொலிஸார் வெளிப்படுத்திக்கொண்டுள் ளனர். அவை தொடர்பில் அனைத்து விடயங் களையும் துல்லியமாக வெளிப்படுத்திக்கொள்ள 7 நாள் தடுப்புக் காவலின் கீழ் நான்கு சந்தேக நபர்களில் இருவரை எடுத்துள்ளனர்.

 ஏனைய இருவரும் பொலிஸ் காவலில் சிகிச்சை பெறும் நிலையில் அவர்களிடமும் விசாரணைகள் இடம் பெறவுள்ளன. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.

STF - பாதாள குழு மோதல் சம்பவத்தின் முழு விபரங்கள் வெளியாகின.. STF - பாதாள குழு மோதல் சம்பவத்தின் முழு விபரங்கள் வெளியாகின.. Reviewed by Madawala News on 8/14/2017 10:56:00 AM Rating: 5