Kidny

Kidny

இன்று கூட்டுறவு சங்க தேர்தலில் கூட்டு எதிர்க் கட்சியினரை ஐக்கிய தேசியக் கட்சியின் குண்டர்கள் குழு தாக்கியதாக குற்றச்சாட்டு.

கொடகவல வரையறுக்கப்பட்ட பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் இன்று (26) நடைபெற்ற தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவொன்றினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூட்டு எதிர்க் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

வாக்களிப்பு நடைபெற்ற ஹம்பேவெல வஜிராம விகாரைக்கு வருகை தந்த குண்டர்கள் குழுவொன்று அங்கிருந்த அதிகாரிகளுக்கு எச்சரித்ததுடன் தாக்குதலும் நடாத்தியதாக கூட்டு எதிர்க் கட்சியின் பிரதி அமைப்பாளர் ரஞ்ஜித் எம்.பி. கூறியுள்ளார்.

மாகாண கூட்டுறவுத் திணைக்களத்தினால் உத்தியோகபுர்வமாக  தேர்தல் நடைபெறும் நிலையில், ஐ.தே.க. ஆதரவாளர்கள் இவ்வாறு தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இத்தேர்தலில் கூட்டு எதிர்க் கட்சிக்கு வெற்றிபெற முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று கூட்டுறவு சங்க தேர்தலில் கூட்டு எதிர்க் கட்சியினரை ஐக்கிய தேசியக் கட்சியின் குண்டர்கள் குழு தாக்கியதாக குற்றச்சாட்டு. இன்று  கூட்டுறவு சங்க தேர்தலில் கூட்டு எதிர்க் கட்சியினரை  ஐக்கிய தேசியக் கட்சியின்  குண்டர்கள் குழு தாக்கியதாக குற்றச்சாட்டு. Reviewed by Madawala News on 8/26/2017 08:40:00 PM Rating: 5