Ad Space avaiable

14 வயது சிறுமியை கடத்தி பாலியல் துஷ் பிரயோகம் | இரு பெண்களை அக்கரைப்பற்று பொலிசார் கைது செய்தனர்.


அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம் புரிந்தவருக்கு துணைபுரிந்த இரு பெண்களை அக்கரைப்பற்று பொலிசார் நேற்று 08) காலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டர்களில் ஒருவர் சிறுமியின் உறவினரான ஆலையடிவேம்பு கோளாவில்3 ஆம் பிரிவைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணாவார். மற்றைய பெண் பொத்துவில்10 ஆம் பிரிவு இன்ஸ்பெக்டர் ஏத்தத்தில் வசிக்கும் கடத்திய சிறுமியின் இன்னொருவினரான 50 வயது டைய பெண்ணாவார்.

இவர்கள் இருவரும் விசாரணையின் பின் அக் கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவரு வதாவது,

ஆலையடிவேம்பு கோளாவில்2ஆம் பிரிவைச் சேர்ந்த 23 வயதுடைய நபரொருவர் கடந்த மாதம் 31ஆம் திகதி இச் சிறுமியை கடத்தி சென்றவர்  இன்ஸ்பெக்டர் ஏத்தத்தில் உள்ள வீடொன்றிலும் மறு நாள் கோளாவில்3 ஆம் பிரிவில் உள்ள வீடொன்றில் விட்டு சென் றுள்ளார்.

மேற்படி இரு வீட்டுக்கார பெண்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.

இதேவேளை சிறுமி யின் கடத்தல் சம்பவம் தொடர்பாக இளைஞனும், சிறுமியின் தாயும் கடந்த 5ஆம் திகதி கைது செய்யப்பட்டு அன்றைய தினம் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எச்.சமீம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவான் இருவரையும் இம்மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட் டமை குறிப்பிடத்தக்கது.


14 வயது சிறுமியை கடத்தி பாலியல் துஷ் பிரயோகம் | இரு பெண்களை அக்கரைப்பற்று பொலிசார் கைது செய்தனர். 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் துஷ் பிரயோகம் | இரு பெண்களை அக்கரைப்பற்று பொலிசார் கைது செய்தனர். Reviewed by Madawala News on 8/09/2017 11:53:00 AM Rating: 5