Ad Space avaiable

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான உடன்படிக்கையை TNA நிறைவேற்ற வேண்டும்.


வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு(TNA) 2013 ஆம் ஆண்டு கைச்சாத்திட்ட உடன்படிக்கையை செயற்படுத்துமாறும் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் நஜாமுஹம்மட் விடுத்தார்.


கடந்த(10.8.2017) அன்று கொழும்பு தெஹிவளையில் நடை பெற்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இக்கோரிக்கையை விடுத்தார்.

ஆவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:

"2013 இல் வடமாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற போது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பல கட்டப் பேச்சு வார்த்தைகளை நடாத்தியது. வட மாகாணத்தில் மாகாண சபை அமையும் போது 1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக்குயேற்ற ஒரு பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என்றும் இன நல்லிணக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கலந்துரையாடப்பட்டு இணக்கம் காணப்பட்டது. உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டது. உடன்படிக்கையில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களது பரம்பரை மீளக்குடியேற உரிமை இருக்கிறது. அவர்கள் மீள் குடியேற்றப்பட வேண்டும் என உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இதனை அங்கீகரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வட மாகாண சபையும் முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

உடன்படிக்கையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிணின் அப்போதைய செயலாளர் பிர்தௌசும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசாவும் கையொப்பமிட்டுள்ளார்கள்.

1990 இல் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 1500 முஸ்லிம் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. இன்று இக்குடும்பங்களின் தொகை 4500 ஆக அதிகரித்துக் காணப்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் 1500 முஸ்லிம் குடும்பங்கள் சொந்தக் காணிகளில் குடியேறியுள்ளனர். 1200 குடும்பங்கள் மீளக்குடியேறுவதில் பல பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளன. ஆனால் இதுவரை தீர்வுகள் கிடைக்கவில்லை காணிக்கச்சேரி நடாத்தப்பட்டது 920 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு காணி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. முள்ளியவளையில் காணி வழங்க அரசு முயற்சித்த போது அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்த்தனர். இதனையடுத்து கூழாமுறிப்பில் காணி இனங்காணப்பட்ட போதும் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வெளியிலிருந்து முஸ்லிம்கள் கொண்டு வரப்பட்டு மீள் குடியேற்ற முயற்சிப்பதாக ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

இது இன நல்லணக்கத்தை அழிக்கும் செயலாகும் மேலும் முஸ்லிம்கள் காடுகளை அழிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. இது சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரனுடனும் பேசியிருக்கிறோம். முஸ்லிம்கள் மீள் குடியேற்றம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருக்கிறோம்.

முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு 225 ஏக்கர் காணி தேவைப்படுகின்றது. ஆனால் 177 ஏக்கரே ஒதுக்கப்பட்டுள்ளது. இது போதாது. அதுபோலவே முல்லைத்தீவு மாவட்ட தமிழக மக்களுக்கும் காணி வழங்க வேண்டியுள்ளது. அக்காணி வழங்கப்படும்வரை முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை கால தாமதப்படுத்த முடியாது"என்றார்.

இதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களும் உரையாற்றினர்.

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான உடன்படிக்கையை TNA நிறைவேற்ற வேண்டும். வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான உடன்படிக்கையை TNA நிறைவேற்ற வேண்டும். Reviewed by Madawala News on 8/14/2017 12:06:00 AM Rating: 5