tg travels

(வீடியோ இணைப்பு) துபாய் Torch Tower இல் பாரிய தீவிபத்து .


உலகின் உயரமான கட்டடங்களில் ஒன்றாக கருதப்படும் டுபாய் மெரினா பகுதியில் அமைந்துள்ள Torch Towerஇல் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 79 மாடிகளை கொண்ட இந்த கட்டடத்தில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கட்டடத்தின் 9வது மாடியில் பற்றிய தீ, தொடர்ந்தும் அடுத்தடுத்த மாடிகளுக்கு பரவி வருவதாகவும், அங்கு குடியிருப்பவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், தீயினை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு படையினர் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்தும் தகவல் வெளியாகவில்லை.

இதேவேளை, 1105 அடி உயரம் கொண்ட Torch Tower 2011ஆம் ஆண்டு திறக்கப்பட்டதுடன், கடந்த 2015ஆம் ஆண்டிலும் இந்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Image result for uae torch tower
(வீடியோ இணைப்பு) துபாய் Torch Tower இல் பாரிய தீவிபத்து . (வீடியோ இணைப்பு) துபாய்  Torch Tower இல் பாரிய தீவிபத்து . Reviewed by Madawala News on 8/04/2017 12:15:00 PM Rating: 5