Kidny

Kidny

குப்பை கொட்டிய ஹோட்டல் உரிமையாளருக்கு கிடைத்த புதுவித தண்டனை. வெலிமடை சம்பவம்.



வெலிமடை நகரத்திலுள்ள வாராந்த சந்தையருகில் பல நாட்களாக இரவு நேரங்களில் குப்பை கூளங்களைக் கொ ட்டி வந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை பிரதேசசபை அதிகாரிகள் கண்டுபிடித்து உடனடியாக அக்குப்பை கூளங்களை தரம் பிரித்து அப்புறப்படுத்துவது மாத்திரமன்றி முழு
நகரையும் சுத்தம் செய்யும் தண்டனை வழங்கிய சம்பவம் வெலிமடையில் இடம்பெற்றது.

   இச்சம்பவம் பற்றி தெரியவ குவதாவது வெலிமடை, பெலுங்கல பிரதேசத்திலுள்ள பிரபல ஹோட் டல் உரிமையாளர் ஒருவர் தினமும் இரவு வேளை களில் சுமார் பதினைந்து உரப்பைகளில் அடைக்கப்பட்ட
குப்பை கூளங்களை தனது ஹோட்டலில் வேலை செய்யும் சிப்பந்திகளின்  உதவியு டன் நகரத்திலுள்ள வாராந்த சந்தையருகில் கொட்டி வந்துள்ளார்.

 பல நாட்களாகியும் குப்பை கொட்டியவரைக்கண் டுபிடிக்க முடியாதிருந்த அதே வேளை, பிரதேச சபை அதி காரிகள் குப்பை கூளங்களைப் பிரித்து பரிசோதனையில் ஈடு பட்ட போது அங்கு மேற்படி ஹோட்டலின் பில்களும் பல ஆவணங்களும் கண்டெடுக்கப்பட்டன.

இதனை யடுத்து அங்கு சென்ற பிரதேச சபை அதிகாரி கள் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஹோட்டலில் வேலை செய்யும் சிப்பந்திபந்திகளை அழைத்துவந்து குப்பை கூளங் களை பொலித்தின் வேறாக வும் கடதாசிகள் வேறாகவும் ஏனையவை வேறாகவும் தரம் பிரித்து அப்புறப்படுத்தியது மாத்திரமன்றி, முழு நாளும் நகரையும் சுத்தம் செய்ய வைத் தமை குறிப்பிடத்தக்கது.

குப்பை கொட்டிய ஹோட்டல் உரிமையாளருக்கு கிடைத்த புதுவித தண்டனை. வெலிமடை சம்பவம். குப்பை கொட்டிய ஹோட்டல் உரிமையாளருக்கு கிடைத்த  புதுவித தண்டனை. வெலிமடை சம்பவம். Reviewed by Madawala News on 8/14/2017 01:15:00 PM Rating: 5