Ad Space avaiable

புகலிடக் கோரிக்கையாளர்கள் மிகவும் கெட்டவர்கள், குற்றவாளிகள் அவர்களை நான் வெறுக்கிறேன்.


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் - அவுஸ்திரேலிய பிரதமர் மல்கொம் மேற் கொண்ட தொலைபேசி உரையாடலின் போது புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றுக் கொள்வதை வெறுப்பதாகவும் அவர்கள் மிகவும் கெட்டவர்களாகவும் குற்றவாளிகளாகவும் உள்ளதாகவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய தலைவர் களுக்கிடையே இடம்பெற்ற மேற்படி தொலைபேசி உரையாடல் தற்போது அம்பலமாகியுள்ளது.

இந்த உரையாடலை வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை முழுமையாக வெளியிட் டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் கடலுக்கு அப் பாலான தடுப்பு நிலையங்களிலுள்ள புக லிடக்கோரிக்கையாளர்களை அமெரிக்கா வுக்குள் உள்வாங்குவதை தான் வெறுப்பதாக இதன்போது டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 "நான் அந்த மக்களை வெறுக்கிறேன். அவர்கள் கெட்டவர்கள் என்பதற்கு நான் உத்தரவாதமளிக்கிறேன்" என அவர் கூறினார். இதன்போது மல்கொம் டேர்ன்பல் மனுஸ் தீவு மற்றும் நாவுறுவிலுள்ள அவுஸ்திரேலியாவின் புகலிடக்கோரிக் கையாளர்களுக்கான தடுப்பு நிலையங்களிலுள்ளவர்கள் பொருளாதார நோக்கில் பயணத்தை மேற்கொண்டு வந்த அகதிகள் எனவும் அவர்கள் குற்றவாளிகள் அல்லர் எனவும் டொனால்ட் ட்ரம்பிற்கு தெளிவுப டுத்த முயன்றுள்ளார்.

ஆனால் ட்ரம்போ குறுக்கீடு செய்து, "குற்றவாளிகள் என்ற காரணத்தாலேயே அவர்கள் தற்போது சிறையில் உள் ளார்கள். அவர்கள் உள்நாட்டு பண்ணைத் தொழிலாளர்களுக்காக பணியாற்றச் செல்லும் போது அற்புதமான மக்களாக அவர்கள் மாறப் போவதில்லை" என்று தெரிவித்தார்.

அந்த அகதிகளை அமெரிக்காவில் மீளக் குடியமர்த்துவது தொடர்பில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவால் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை மோசமான ஒன்று எனத் கூறிய அவர், தான் இனிமேலும் குடியேற்றவாசிகளை அமெரிக்காவுக்குள் உள்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் மிகவும் கெட்டவர்கள், குற்றவாளிகள் அவர்களை நான் வெறுக்கிறேன். புகலிடக் கோரிக்கையாளர்கள் மிகவும் கெட்டவர்கள், குற்றவாளிகள் அவர்களை நான் வெறுக்கிறேன். Reviewed by Madawala News on 8/05/2017 12:08:00 PM Rating: 5