Ad Space Available here

யானைக்கு விளையாட்டு.. மக்களுக்கு திண்டாட்டம் !! மத்திய வங்கி பணம் எங்கே ??எமது நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்று வந்த ஊழல் மோசடிகளை களைந்து இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்ல நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என மக்களை மயக்கி நாட்டை அபிவிருத்தி செய்துவந்த மஹிந்த ஆட்சியை (நல்லாட்சியின் பக்தர்கள் சொல்வது போன்று ஊழல் நிறைந்திருந்தால் நிறுபித்திருக்க வேண்டும்.) வீழ்த்தி தற்போதைய ஆட்சியை நிறுவியிருக்கும் ஐக்கிய தேசிய முன்னணியும் கை சின்னத்தின் உரிமையாளர்களும் நாட்டை வாக்குறுதியளித்தபடி ஆட்சி செய்தார்களா என கேள்வியெழுப்ப வேண்டிய தேவை இலங்கையர்களுக்கு இப்போது எழுந்துள்ளது.


முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் மத்தியவங்கியில் பல கோடிக்கள் முறைகேடு செய்ததாக பதவி நீக்கியிருக்கும் நல்லாட்சி அரசாங்கம் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? அவரை பதவி நீக்கினால் மக்களின் வரிப்பணம் வந்துவிடுமா என்பது சாமானிய பிரஜையின் கேள்வியாக உள்ளது. அவரை பதவி நீக்குவதன் மூலம் எதுவும் ஆகப்போவதில்லை என்பதையும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து இந்த நாட்டின் மக்களின் வரிப்பணத்தை மீட்டுத்தர இந்த அரசு முயற்சிக்க வேண்டும்.


இல்லாது போனால் நாட்டை கொள்ளையடிக்க முனைந்த போது அவற்றுக்கு ஒத்துழைக்க வில்லை என்பதால் அவரை நிதியமைச்சர் பதவியில் இருந்து விளக்கினார்களா?என சந்தேகிக்கவேண்டி உள்ளது.


அதே போன்று நீதியமைச்சராக இருந்த விஜயதாச ராஜபக்ச அவர்களை பதவி நீக்கியிருக்கும் இந்த நல்லாட்சி அரசு அவர் இனவாதத்தை பகிரங்கமாக பரப்பியபோது அமைதியாக இருந்துவிட்டு இப்போது அவரது பதவியை நீக்கிய காரணம் என்ன ? இந்த நல்லாட்சியில் இரண்டரை வருடங்களாக நீதியமைச்சராக இருந்த விஜயதாச ராஜபக்ச அவர்கள் இனவாதி ஜானசாரவை பாதுகாக்கிறார் என முழுநாடும் கோஷம் எழுப்பியபோது அமைதியாக இருந்துவிட்டு இப்போது மஹிந்த அரசின் ஊழலை விசாரிக்க தடையாக இருப்பதாகவும் அதனால் அவரை பதவி நீக்கியதாகவும் கூறும் அறிவாளிகளுக்கு நீதியமைச்சரை விட பிரதமரும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் அதிகாரம் மிக்கவர்கள் என்பது தெரியாமல் போன மர்மம் என்ன ??


ஐக்கிய தேசிய கட்சியின் சக்திமிகு முக்கியஸ்தர்கள் இருவரின் பதவி நீக்கமானது எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற அப்பாவிகளான ரவியும்,விஜயதாசவும் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளது அப்பட்டமாக காண்பிக்கிறது.


இந்த பதவிநீக்கத்தை மக்களுக்கு படமாக காட்டி தேர்தல் வெற்றியை சுவைக்க ஐக்கிய தேசிய கட்சி போடுகின்ற நாடகமாக இதனை நோக்கவேண்டி உள்ளது. நீதியமைச்சரின் இராஜினமாநாடகம் அரங்கேற முன்னர் ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு அடமானம் வைக்க பகிரங்க எதிர்ப்பை முன்வைத்தார் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.


இதனை இன்னுமொரு பக்கத்தால் நோக்குகின்ற போது சிறந்த ஆளுமைகளான ரவி, விஜயதாச,சஜித் பிரேமதாச போன்றோர்களால் கட்சி தலைமையின் இறுதி இலக்காக இருக்கின்ற ஜனாதிபதி ஆசன கனவு கேள்விக்குறியாகும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது அதனால் இவர்களை மட்டம் தட்டி மக்களிடம் இவர்களின் செல்வாக்கை குறைக்க எடுத்திருக்கும் சதியாக கூட நோக்கலாம். என்றாலும் பதவியை இராஜினமா செய்து விட்டு இவர்கள் மௌனமாக இருப்பது பாரிய சந்தேகத்தை தொற்றுவிக்காமலும் இல்லை.இவர்களின் மௌனம் கலைந்தால் பாரிய அரசியல் நெருக்கடிகள் எழும் என்பது உலகறிந்த உண்மை.

இவர்கள் கூறுவது போன்று கடந்த ஆட்சியின் ஊழலை விசாரிக்க நீதியமைச்சர் தடையாக இருந்திருந்தால் அண்மையில் மாற்றப்பட்ட அமைச்சரவையின் போது ஏதாவது மாற்றம் வந்திருக்க வேண்டும். நிதியமைச்சர் செய்த ஊழலுக்கு மக்கள் எதுவும் செய்ய முடியாது ஆதலால் அதற்க்கு எதிராக விரைவாக நடவடிக்கை எடுத்து மக்கள் பணம் மீண்டும் உரிய இடத்திற்க்கு திரும்ப இந்த நல்லாட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் !!
யானைகள் சண்டையிடும் போது எதுவும் அறியாத அப்பாவி புற்கள் செத்து மடிய முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள் !!


அல்ஹாஜ் நூறுல் ஹுதா உமர் 
தலைவர்
அல்-மீஸான் பௌண்டசன் ,இலங்கை
யானைக்கு விளையாட்டு.. மக்களுக்கு திண்டாட்டம் !! மத்திய வங்கி பணம் எங்கே ?? யானைக்கு விளையாட்டு.. மக்களுக்கு திண்டாட்டம் !! மத்திய வங்கி பணம் எங்கே ?? Reviewed by Madawala News on 8/25/2017 11:07:00 AM Rating: 5