tg travels

கெலிஓயா கலுகமுவை பகுதியில் பத்து மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு.

 
-எம்.எம்.எம். ரம்ஸீன்-
கெலிஓயா கலுகமுவை பகுதியில் க.பொத. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் பத்து பேர் இம்முறை பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் மூன்று மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கும் ஒரு மாணவி மருத்துவ பீடத்திற்கும் ஒருவர் சட்ட பீடத்திற்கும் ஐந்து மாணவர்கள் கலைப்பீடததிற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில்,
 பாத்திமா அஸீஸா கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டபீடத்திற்கும் அஹமட் தஹ்லான் மொரட்டுவை பல்கலைக்கழத்தில் பொறியியல் பீடத்திற்கும் 
எம்.எப்.ஏ.  பாஸித் ருகுணு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்திற்கும்
 எம்.ஏ.எப். சஹ்ரா பேகம் பேராதனை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்திற்கும் முஹம்மத் முஸ்னி ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்பத்துறைக்கும்,
பாத்திமா நஸீரா, பாத்திமா ராஸிதா மற்றும் சில்பா பானு ஆகியோர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்திற்கும்  பாத்திமா அஸ்னா மற்றும் 
பாத்திமா இல்மா ஆகியோர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்திற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


இம்மாணவர்கள் கலுகமுவ முஸ்லிம் மத்திய கல்லூரி , ஹெம்மாதகமை அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரி முதலான பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்வி பயின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.  

இது கலுகமுவ கிராமத்தில் ஒரே தடவையில் அதிகளவு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுக் கொண்ட முதல் சந்தர்ப்பம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இம்மாணவர்கள் யாவரும் கலுகமுவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பிட்ட மாணவர்களின் சாதனை பாடசாலைக்கும் , சமூகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், எதிர்வரும் காலத்திலும் இப்பிரதேச மாணவர்கள் பல துறைகளில் பலகலைக்கழகம் நுழைய தாம் பாடுபட உள்ளதாகவும். வாழ்த்துக்களையும் கலுகமுவ முஸ்லிம் மத்திய கல்லூரி அதிபர் ஜனாப் அப்துல் ரஸாக் தெரிவித்துக் கொண்ட்டார்.


கெலிஓயா கலுகமுவை பகுதியில் பத்து மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு. கெலிஓயா கலுகமுவை பகுதியில் பத்து மாணவர்கள்  பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு. Reviewed by Madawala News on 8/02/2017 10:37:00 AM Rating: 5