tg travels

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச பதவி நீக்கப்பட வேண்டும் ; UNP பின் வரிசை பா உறுப்பினர்கள் கோரிக்கை ..


நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச பதவி நீக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருவதாக அறியமுடிகிறது.

ஆளுங்கட்சியிலிருந்து கொண்டு கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை எதிரொலிக்கும் வகையில் நடந்து கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருவதாக அறியமுடிகிறது.
விஜேதாச ராஜபக்ச தொடர்ச்சியாக அரச விரோத கருத்துக்களைத் தெரிவித்து வருவதாகவும் அண்மையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மக்களுக்காக மீட்கும் வரை போராடப்போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் விஜேதாச ராஜபக்‌ஷ விடயம் தற்போது இலங்கை அரசியல் அரங்கில் சூடு பிடித்துள்ளது.

 

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச பதவி நீக்கப்பட வேண்டும் ; UNP பின் வரிசை பா உறுப்பினர்கள் கோரிக்கை .. நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச பதவி நீக்கப்பட வேண்டும் ; UNP பின் வரிசை பா உறுப்பினர்கள் கோரிக்கை .. Reviewed by Madawala News on 8/12/2017 03:24:00 PM Rating: 5