Kidny

Kidny

விஜேதாசவை நீக்கவும் ! UNP ஜனாதிபதிக்கு அறிவித்தது ..


நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ வகிக்கும் சகல அமைச்சரவை பதவியில் இருந்தும் அவரை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக,ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.


செயற்குழுவின் தீர்மானத்துக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.


இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


இதேவேளை, நீதி மற்றும் புத்த சாசன அமைச்சில் இருந்து அமைச்சர் விஜே­தாஸ ராஜபக்ஷ நீக்­கப்­ப­டக்­கூ­டாது. அவரை பாது­காக்க ஜனாதி­பதி, பிர­தமர் முன்­வ­ர­வேண்டும் என சகல பௌத்த பீடங்­களின் பிர­தி­நி­தி­களும் நேற்று தெரிவித்திருந்தது.


நீதி அமைச்­சரும் புத்த சாசன அமைச்­ச­ரு­மான விஜே­தாஸ ராஜ­பக்ஷ குறித்த பத­வியில் இருக்கும் வரையில் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வுக்கு எதி­ரான விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு தடை­யாக இருப்பார் என்றும்  அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்தம் தொடர்­பாக நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக்ஷ வெளி­யிட்­டுள்ள கருத்­துக்கள் கட்­சியின் கொள்­கைக்கு நேரெ­தி­ராக காணப்­ப­டு­கின்­றன எனவும்  அண்­மையில்  ஐக்­கிய தேசியக் கட்­சியின் பின்­வ­ரிசைப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தனர். 


ஆகவே அமைச்சர்  வெளிப்­ப­டுத்­திய கருத்­துக்­களை பகி­ரங்­க­மாக மீளப்­பெற்­றுக்­கொள்ள வேண்டும் எனவும் குறிப்­பாக அவர் நீதி அமைச்­சுப்­ப­த­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமச் செய்ய வேண்டும் என்று பல ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பி­னர்­களால் வலி­யு­றுத்­தப்­பட்­டன. 


ஆனால், அனைத்து விமர்­ச­னங்­க­ளையும், எதிர்ப்­புக்­க­ளையும் அமை­தி­யாக கேட்­டுக்­கொண்­டி­ருந்த அமைச்சர் விஜே­தாஸ தனது நிலைப்­பாடு தவ­றா­னது அல்ல என்­ப­தைய மையப்­ப­டுத்தும் வகையில் திட்­ட­வட்­ட­மாக கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்தார்.


எவ்­வா­றா­யினும் அமைச்சர் விஜே­தாஸ தனது நிலைப்­பாட்­டினை மாற்றிக் கொண்­ட­தாக இல்லை. அத்­துடன் தனது மனச்­சாட்­சிப்­ப­டியும் நாட்டின் எதிர்­காலம் கரு­தி­யுமே குரல்­கொ­டுப்­ப­தா­கவும் கடந்த தினங்­களில் பௌத்த மத­கு­ருமார் உட்­பட பொது­மக்­க­ளி­டத்­திலும் சுட்­டிக்­காட்­டி­யுள்ள அவர் சட்­டமா அதிபர், திணைக்­களம், நீதித்­துறை ஆகி­ய­வற்­றினுள் தலை­யீ­டு­களைச் செய்த ஆட்­சி­யா­ளர்கள் சம்­ராஜ்­யத்­தினை இழந்­ததே இலங்கை வர­லாறு என்றும் காட்­ட­மாக குறிப்­பிட்­டுள்ளார்.

இதனையடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிஅ தேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


விஜேதாசவை நீக்கவும் ! UNP ஜனாதிபதிக்கு அறிவித்தது .. விஜேதாசவை நீக்கவும் ! UNP ஜனாதிபதிக்கு அறிவித்தது .. Reviewed by Madawala News on 8/22/2017 03:04:00 PM Rating: 5