Ad Space avaiable

மாடிப்படியில் இருந்து கால்தவறி இடறி விழுந்த நான்கு பிள்ளைகளின் தந்தை முஹம்மத் ஹாஸிம் உயிரிழப்பு. #கம்பளை


கம்பளை , கீரப்பனை பகுதியில் வீட்டு மாடிப்படியில் இருந்து கால்தவறி இடறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவரின் ஜனாஸாவை நேற்று கம்பளை போலீசார் மீட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது..

கம்பளை கீரப்பனையை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான இக்குடும்பஸ்தர் தனது விட்டில் தனி மையாக வசித்து வந்துள்ளார்.

இவரின் உறவினர் நேற்றுமுன்தினம் இரவு 01.03.207) இவருக்கான உணவை கொடுத்து விட்டு வந்துள்ளார்.

 இந்நிலையில் நேற்று காலை வீடு வெகு நேரமாகியும் திறக்கப்படாமையைத் தொடர்ந்து உறவினர்கள் வீட்டினுள் சென்று பார்த்த போது குடும்பஸ்தர் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இது பற்றி கம்பளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உடல்  மீட்கப்பட்டுள்ளது.

இதில் உயிரிழந்தவர் முஹம்மத் ஹாஸிம் (வயது 66) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்ட கம் பளை பொலிஸார் சடலத்தை கம் பளை போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

 மேலும், இவர் வீட்டின் மாடியிலிருந்து இறங்கும் போது கால் இடறி விழுந்து படுகாய மடைந்த நிலையில் இறந்திருக்கலாம் என்று பொலிஸார் நம்புகின்றனர் இது தொடர்பான மரண விசார ணைகள் கம்பளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பான மேலதிக விசாரணைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


மாடிப்படியில் இருந்து கால்தவறி இடறி விழுந்த நான்கு பிள்ளைகளின் தந்தை முஹம்மத் ஹாஸிம் உயிரிழப்பு. #கம்பளை மாடிப்படியில் இருந்து கால்தவறி இடறி விழுந்த நான்கு பிள்ளைகளின் தந்தை முஹம்மத் ஹாஸிம் உயிரிழப்பு. #கம்பளை Reviewed by Madawala News on 8/03/2017 02:06:00 PM Rating: 5