Kidny

Kidny

மாணவர்களுக்கு கஞ்சா கலந்த பாபுல் விற்ற இளம் பெண். #தர்கா நகர் பகுதி பிரபல பாடசாலையருகில் சம்பவம்.


 மாணவர்களுக்கு கஞ்சா கலந்த பாபுல் விற்பனை செய்வதாக சந்தேகிக்கப்படும் 33 வயதுடைய 03 பிள்ளைகளின் தாய் ஒருவரை 21 பாபுல் பொதிகளுடன் அளுத்கமை பொலிஸார் கைது செய்து களுத்துறை பதில் நீதிவான் வஜிர லக்ஸ்மன் அஸரப்புலி முன்னி லையில் ஆஜர் செய்த போது விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட் டார்.

தர்கா நகர் பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றுக்கு அருகில் வசிக்கும் பெண் ஒருவரே இவ்வாறு சந் தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்தான் அணியும் ஸாரியில் மறைத்து வைத்து கஞ்சா
கலந்த பாபுல் விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து களுத்துறை பொலிஸ் அத்தியட்சகர் உபுல் நில்மினி ஆரியரத்தினவின் பணிப்பில் அளுத்கமை பொலிஸார் சந்தேகநபரை கைது செய்தனர்.


இதன்போது அவரிடமிருந்த 17000 ரூபா பணமும் இதன் போது பொலி ஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா கலந்த பாபுல் பொதிகளின் மொத்த நிறை 6 கிலோ 300 கிராமாகும்.

 மாணவர்களுக்கு இந்தப் பாபுல் பொதிவிற்பனை செய் யப்படுவதாக அளுத்கம பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து அறிக்கை சமர்ப்பித்தனர்.
மாணவர்களுக்கு கஞ்சா கலந்த பாபுல் விற்ற இளம் பெண். #தர்கா நகர் பகுதி பிரபல பாடசாலையருகில் சம்பவம்.  மாணவர்களுக்கு கஞ்சா கலந்த பாபுல் விற்ற இளம் பெண். #தர்கா நகர் பகுதி பிரபல பாடசாலையருகில் சம்பவம். Reviewed by Madawala News on 8/03/2017 11:46:00 AM Rating: 5