Ad Space Available here

வித்யா கொலை வழக்கு பகுதி - 01 ( அதிகாலையில் சப்பாத்துடன் வந்து வித்யாவின் உடலை அடையாளம் காட்டியது நாய்)மே மாதம் 13ஆம் நாள் காலை 07 மணி வித்யா வழக்கம் போல வீட்டிலிருந்து பாடசாலை சீருடையுடன் பாடசாலை செல்வதற்காக வெளியேறுகிறாள் அது ஒரு வியாழக்கிழமையாக இருந்தது அவள் கல்வி கற்றது புங்குடுதீவு மகா வித்யாலயம் ஆனால் அந்த துரதிஸ்டவசமான நாளில் அவள் பாடசாலையையும் சென்றடையவில்லை பாடசாலை முடிவடையும் நேரமாகியும் அவள் வீட்டுக்கும் வரவில்லை மணி 3ஆகவே வீட்டில் உள்ளவர்களின் கவனம் வித்யாவின் வருகையின்மையை நோக்கி திரும்புகிறது வித்யாவின் சகோதரனான நிஷாந்தன் அவளை தேடுகிறான் .


அருகில் பல இடங்களிலும் விசாரிக்கிறான் பலன் இல்லை இறுதியாக மாலை 06 மணியளவில் அருகாமையில் இருந்த போலீஸ் நிலையமொன்றில் முறைப்பாடு ஒன்றை செய்கின்றனர் வித்யாவின் வருகையின்மையை குறித்து ஆனால் அங்கிருந்த போலீஸ் உத்தியோகத்தர்கள் வித்யா வேறு யாருடனும் ஓடி போயிருக்கலாம் என்ற தோரணையில் அந்த முறைப்பாட்டினை சட்டை செய்ததாக தெரியவில்லை.


தொடர்ந்து அந்த இரவு அந்த குடும்பத்திற்கு ஒரு தூக்கம் இல்லாத இரவாக கழிந்தது அந்த இரவு கடுமையான மழையும் பெய்தது அதிகாலை விடிகின்ற வேளை வித்யாவால் வளர்க்கப்பட்ட நாய் வித்யாவின் ஒற்றைக்கால் சப்பாத்து ஒன்றுடன் வீடு வந்து அதனை நிஷந்தனிடம் காட்டுகிறது, உடனே நேரத்தை விரயம் செய்யாமல் நிஷாந்தன் அந்த நாயை பின்தொடர்ந்து செல்கிறார் அந்த நாய் ஆலடி சந்தியை கடந்து சென்று ஒரு ஒற்றையடி பாதையினுள் நுழைகிறது அதனூடாக சென்ற நிஷாந்தன் தனது தங்கையான வித்யாவின் சடலத்தை காண்கின்றான்.

 அச்சடலமானது மல்லாக்காக முகம் மேலே பார்த்தவாறு இரண்டு கைகளும் பின்புறம் மடித்து பிடரிப்பகுதியில் வைத்து பச்சை நிற ரிபனால் பெரு விரல்கள் இரண்டையும் சேர்த்து கட்ட பட்டிருந்தது வெள்ளை நிற பெனியனாலும் கூந்தலின் ஒரு பகுதியினாலும் கட்டப்பட்டிருந்தது கால்கள் இரண்டும் 180 பாகைக்கு அதிகமாக விரிக்கப்பட்டு இரண்டு மரங்களில் கட்டப்பட்டிருந்தன வலது காலானது கருப்புநிற மார்பு கச்சையின் கிழிந்த ஒரு பகுதியினால் அலரி மரத்திலும் இடது காலானது இடுப்பு பட்டியால் அலரி மரத்திலும் கட்டப்பட்டிருந்தது மேலும் கண் மற்றும் மூக்கு வீங்கியிருந்ததோடு வாய்ப்பகுதி திறந்திருந்ததோடு அதனுள் பெண்கள் அணியும் உள்ளாடை திணிக்கப்பட்டிருந்தது என சாட்சியமளித்த பிரேத பரிசோதனை செய்த யாழ் வைத்தியரின் சான்று கூறப்பட்டது.


போலீஸ் சம்பவ இடத்தை வந்தடைய பகல் வேளையானது அதனை தொடர்ந்து அங்கு சூழ்ந்த மக்கள் கூட்டம் சடலத்தை சூழ தொடங்கியது இதற்கிடையில் போலீசார் சந்தேக நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டு மோப்ப நாய்களின் உதவியுடன் 3 சந்தேக நபர்களை கைது செய்திருந்ததோடு மேலும் ஐந்து சந்தேக நபர்களையும் கைது செய்தனர், இவர்கள் ஐவரும் நாட்டை விட்டு வெளியேற முயன்ற வேளை பிரதேச மக்களால் வளைத்து பிடிக்கப்பட்டனர் எல்லாமாக பொலிசாரால் 12 சந்தேக நபர்கள் கைது செய்ய பட்டதோடு அவர்களில் 09 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது அவர்களின் பெயர்கள் முறையே =

1 ஆம் எதிரி சின்னராஜா என்றழைக்கப்படும் பூபாலசிங்கம் இந்திரகுமார்
2 ஆம் எதிரி ரவி என்றழைக்கப்படும் பூபாலசிங்கம் ஜெயக்குமார்
3 ஆம் எதிரி செந்தில் என்றழைக்கப்படும் பூபாலசிங்கம் தவக்குமார்
4 ஆம் எதிரி சசி என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிதரன்
5 ஆம் எதிரி சந்திரா என்றழைக்கப்படும் தில்லைநாதன் சந்திரகாந்த்
6 ஆம் எதிரி பெரியதம்பி என்றழைக்கப்படும் சிவதேவன் துஷாந்த்
7 ஆம் எதிரி சிசந்தன் என்றழைக்கப்படும் பழனி ரூபசிங்கம் குகநாதன்
8 ஆம் எதிரி கரு என்றழைக்கப்படும் ஜெயதரன் கோகிலன்
9 ஆம் எதிரி சுவிஸ்குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார்

இதன்படி இவ் வழக்கில் 1,2,3 ஆகிய எதிரிகள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், 4,9 ஆகிய எதிரிகள் சகோதரர்கள், 6,9 ஆகிய எதிரிகள் மச்சான் உறவு முறையினர். என்பது இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமொன்றாகும்.

இதனை தொடர்ந்து 2015/12/16 அன்று மேலும் ஒரு சந்தேகநபர்(ஜெயவர்த்தனா ராஜ்குமார் ) கைது செய்யபட்டதுடன் பத்து சந்தேக நபர்களும் ஊர் காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்க மறியலில் தொடர்ந்தும் வைக்கப்பட்டனர் இதற்கிடையில் 2016/02/29 அன்று மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் 2016/03/02 அன்றே விடுவிக்கப்பட்டனர்.


இந்நிலையில் படுகொலையோடு தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் இருவர் 2016 ஏப்ரல் மாதமளவில் கைது செய்யப்பட்டனர், கைது செய்யப்பட்ட இருவரில் 11ஆவது சந்தேக நபர் மாணவியின் படுகொலையை நேரில் பார்த்தவர் எனவும் கொலையாளிகளுக்கு போதை பொருட்களை விநியோகித்தவர் எனவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் வழக்கு விசாரணைகளின் போது தெரிவித்திருந்தனர்.


அத்துடன், 12 ஆவது சந்தேகநபர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.


மேலும் இதற்கிடையில் வித்யாவின் தாயார் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் வவுனியா காமினி மஹா வித்தியாலதிற்கு அருகில் புதிய வீடொன்று நிர்மாணிக்கப்பட்டு 2016/04/03 இல் கையளிக்கப்பட்ட நிலையில் 2016/05/04 அன்று வழக்கு நடவடிக்கைகளுக்காக நீதிமன்றுக்கு வருகை தந்த வித்யாவின் தாயாரான பூலோகநாதன் சரஸ்வதி என்பவரை மிரட்டியமை என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்களின் உறவினர்களான 9ஆம் எதிரி சுவிஸ்குமாரின் தாயான மகாலிங்கம் தவராணி என்பவரும் 6ஆம் எதிரி துஷாந்த் என்பவரின் தாயான செல்வராணி என்பவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சுவிஸ்குமாரின் தாயான மகாலிங்கம் தவராணி என்பவர் 2016/07/17 அன்று யாழ் சிறைச்சாலையில் வைத்து உயிரிழந்தார்.....


மிகுதி அடுத்த பகுதியில்

டயஸ் சர்மிலன்,
சட்டபீடம்,
கொழும்பு பல்கலைகழகம். 
(இந்த தொகுப்பானது செய்தி வலைதளங்களில் இருந்தும் தினசரி பத்திரிகைகளிலிருந்தும் பெறப்பட்டு தொகுக்கப்பட்ட ஒன்றாகும்)
வித்யா கொலை வழக்கு பகுதி - 01 ( அதிகாலையில் சப்பாத்துடன் வந்து வித்யாவின் உடலை அடையாளம் காட்டியது நாய்) வித்யா கொலை வழக்கு பகுதி - 01 ( அதிகாலையில் சப்பாத்துடன் வந்து வித்யாவின் உடலை அடையாளம் காட்டியது நாய்) Reviewed by Madawala News on 8/03/2017 10:02:00 AM Rating: 5