tg travels

அகில தனஞ்சய பற்றி விராட் கோஹ்லி தெரிவித்தவை...


கண்டி பல்லேகலயில் நடைபெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் புதிர் சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவிடம் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி போல்டானார்.

எனினும் டோனி, புவனேஷ் ஆகியோரது உறுதியான துடுப்பாட்டத்தினால் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் கோஹ்லி தனது வழக்கமான 3ஆம் நிலையில் களமிறங்கவில்லை. 4 ஓட்டங்களைப் பெற்றிருந்த அவர் தனஞ்சயவின் கூக்ளியில் போல்ட் ஆனார்.

அவரது வழக்கமான கவர் டிரைவ் ஸ்ட்ரோக்கில்தான் அவர் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்தவுடன் பேசிய கோஹ்லி கூறியதாவது:


மிகவும் விறுவிறுப்பான ஆட்டம். ரசிகர்களுக்கும், வீரர்களுக்குமே நல்ல பொழுதுபோக்கு. இறுதியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் 3ஆம் நிலையில் களமிறங்கியிருந்தாலும் கூட அந்தக் குறிப்பிட்ட பந்தில் நான் போல்ட் ஆகியே இருப்பேன்.

தனஞ்சய அப்படி அபாரமாகவே வீசினார். நாங்கள் அவரை நல்ல லெக்பிரேக்குகள் வீசும் ஒரு ஒவ் ஸ்பின்னர் என்று நினைத்தோம்,

ஆனால் அவரோ 4 விக்கெட்டுக்களை கூக்ளியில் கைப்பற்றினார். அவருக்கு எதிராக அடுத்த முறை இன்னும் எச்சரிக்கையாக
இருப்போம்.

சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்ததும், அவரிடம் உள்ள கட்டுப்பாடும் அபாரமானது, பாராட்டத்தகுந்தது. இவ்வாறு விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

அகில தனஞ்சய பற்றி விராட் கோஹ்லி தெரிவித்தவை... அகில தனஞ்சய பற்றி விராட் கோஹ்லி தெரிவித்தவை... Reviewed by Madawala News on 8/26/2017 11:25:00 AM Rating: 5