Kidny

Kidny

விஜேதாஸ ராஜபக்ஷவை கூட்டு எதிர்க்கட்சி, பொது வேட்பாளராக களமிறக்க மாட்டோம்.



அமைச்சர் விஜேதாஸ் ராஜபக்ஷவை கூட்டு எதிர்க்கட்சி, தேர்தலில் பொது வேட் பாளராக களமிறக்கப்போவதில்லை. நாம் தேர்தல்களில் பொதுவேட்பாளரை நிறுத்துவதில்லை.

எமது அபேட்சகர்களையே களமிறக்குவது வழமை. எனவே அமைச்சர் விஜேதாஸ் ராஜபக்ஷவை கூட்டு எதிர்க்கட்சி  நிறுத்தும் யோசனையுள்ளதாகத் தெரிவிக்கும் கருத்தில் உண்மைத் தன்மையில்லை என பாரா ளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்தார்.


கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊட கவியலாளர் சந்திப்பு நேற்று பொரளையிலுள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரை யாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரி வித்தார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்திற்கெதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தது. எனினும் குறித்த குற் றச்சாட்டுகள் அனைத்தும் யதார்த்தத்திற் குப்புறம்பானது என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.


எனவே தற்போது அவருக்கு எதிராக தண்டனை வழங்கப்படாமை தொடர்பில்
கட்சி, பொது வேட்பாளராக நீதியமைச்சர் விஜேதாஸ் ராஜபக் ஷவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் அரசாங்கம் முன்வந்துள்ளது.

மேலும் அரசாங்கத்தின் தேவைகளுக்கு ஏற்பசட்டமா அதிபர் செயற்படாமை தொடர்பில் கடந்த வாரம் அலரி மாளிகை க்கு அவரை அழைத்து கீழ்த்தரமான முறையில் நிந்தித்து அச்சுறுத்தியுள்ளதாகவும் அறிய முடிகிறது.

ஆகவே இதுவா நல்லாட்சி என்கின்ற கேள்வியை அரசாங்கத் திடம் கேட்டுக்கொள்கிறோம். எனவே அரசாங்கம் மேற்கொண்டுவரும் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விளைகின்றமை தெளிவாகின்றது.

அமைச்சர் விஜேதாஸ் ராஜபக் ஷவிற்கு கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு தெரிவிப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். எனினும் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ளவர்களை பிழையற்றவர்களாக சித்தரிக்கவோ அல்லது அவர் களைப் பாதுகாக்கவோ எமக்கு எவ்விதத் தேவைப்பாடும் இல்லை.

தமது உறுப்பினர்களுக்கு பதவி வழங்குவதற்கும் அல்லது பதவி நீக்கம் செய் வற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிக ரமுள்ளது. எனினும் அமைச்சர் விஜே தாஸ் ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்வ தற்கான பின்னணி தொடர்பிலேயே நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்.

பழிவாங் கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்காமைக்காக அவரை பதவி நீக்கம் செய்ய முற்படுவதையே தாம் எதிர்க்கின்றோம் என்றார்.

விஜேதாஸ ராஜபக்ஷவை கூட்டு எதிர்க்கட்சி, பொது வேட்பாளராக களமிறக்க மாட்டோம்.  விஜேதாஸ ராஜபக்ஷவை கூட்டு எதிர்க்கட்சி, பொது வேட்பாளராக களமிறக்க மாட்டோம். Reviewed by Madawala News on 8/24/2017 02:00:00 PM Rating: 5