Kidny

Kidny

எந்தவொரு இந்திய வீரரும் இல்லாமல் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள உலக பதினொருவர் அணி Vs பாகிஸ்தான் போட்டி பற்றிய விபரங்கள்.


Razana Manaf
கடந்த எட்டு வருடங்களாக உயிர்ப்பிக்கப்படாமல் கிடந்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்குபுத்துயிர் கொடுத்து எழுச்சியடையச்செய்யும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் அரசும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.

பல நாடுகளின் கிரிக்கெட் அணிகள் பாதுகாப்பை காரணங்காட்டி மறுத்துக்கொண்டே வருகின்றன, சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் பாகிஸ்தானுக்கு எடுத்து வரவேண்டும் என்பதற்கா இந்த வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் பிரிமியர் லீக்கின் இறுதிப்போட்டியையும் கூட பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை பாகிஸ்தானிலேயே நடத்தி ஏனைய கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு பாகிஸ்தானின் பாதுகாப்பை அறிவி்திருந்தது.

ஆனாலும் எல்லா நாடுகளும் ஒரு புறக்கணிப்பையே மேற்கொண்டு வந்திருந்தன, பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அயராத முயற்சியினால் மீண்டும் ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

செப்டம்பர் 12, 13, மற்றும் 15ம் திகதிகளில் லாஹூர் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கும் உலக பதினொருவர் அணிக்குமான ஒரு டீ டுவன்டி கிரிக்கெட் தொடரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலக பதினொருவர் அணிக்காக தென்னாபிரிக்காவை சேர்ந்த ஐந்து வீரர்களும், அவுஸ்திரேலியாவை சேர்ந்த மூன்று வீரர்களும், மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த இரண்டு வீரர்களும் மற்றும் இங்கிலாந்து, இலங்கை, பங்களாதேஷ், நியூசிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒரு வீரரும் என பதினான்கு வீரர்கள் உலக பதினொருவர் அணிக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர், இந்த அணிக்கு பாப் டூ ப்ளீஸ் அணித்தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அதே நேரம் சிம்பாப்வே அணியின் முனானாள் வீரர் அண்டி ப்ளவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். உலக பதினொருவர் அணியில் இந்திய வீரர்கள் யாரும் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த எட்டு வருடங்களாக பாகிஸ்தான் அணி தமது போட்டிகளையெல்லாம் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலேயே விளையாடி வருவதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை பல பல கோடி ரூபாய்களை தமது வருமான இழப்பாக இழந்து வருகின்றது அந்நாட்டு கிரிக்கெட்டை பாதிப்படையச்செய்துள்ளது.

உலக பதினொருவர் அணியில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பதினான்கு வீரர்கள்.

பாப் டு ப்ளீஸ், ஹாஸீம் அம்லா, சாமுவேல் பத்ரி,ஜோர்ஜ் பெய்லி, போல் கொலிங்வூட், பென் கட்டிங், க்ரான்ட் எலியோட், தமிம் இக்பால், டேவிட் மில்லர், மோர்ன் மோர்க்கல், டிம் பெய்ன், திசார பெரேரா, இம்றான் தாஹிர், டெரன் சமி.
எந்தவொரு இந்திய வீரரும் இல்லாமல் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள உலக பதினொருவர் அணி Vs பாகிஸ்தான் போட்டி பற்றிய விபரங்கள். எந்தவொரு இந்திய வீரரும் இல்லாமல் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள உலக பதினொருவர் அணி Vs பாகிஸ்தான் போட்டி பற்றிய விபரங்கள். Reviewed by Madawala News on 8/24/2017 07:11:00 PM Rating: 5