Ad Space Available here

(முழு உரை இணைப்பு) நாட்­டையும், தேசி­யத்­தையும் பாது­காக்க பெளத்த சங்­கத்­தினர் முன்­வ­ர­வேண்­டிய காலம் வந்­துள்­ளது.


நாட்டின் 70 ஆண்­டு­கால தனிக்­கட்சி அர­சி­யலில் செய்ய முடி­யா­ததை தேசிய அர­சாங்­கத்தில் முன்­னெ­டுக்­கவே கூட்­டாட்சி அர­சாங்­கத்தை அமைத்தோம்.

எனினும் தேசிய அர­சாங்­கத்­திலும் எதிர்­பார்த்­ததை செய்ய முடி­ய­வில்லை.
சர்­வ­தேச தேவைக்­கா­கவே இந்த அர­சாங்­கமும் இயங்­கு­கின்­றது என நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜபக்ஷ தெரி­வித்தார்.

சர்­வ­தேச விசா­ர­ணைக்கு நான் தடை­யாக உள்­ள­தா­லேயே என்னை இலக்கு வைத்­துள்­ளனர். ஆனால் நாட்டை சரி­யான திசையில் திருப்பும் தேவைக்­காக அர­சியல் மாற்­றத்தை செய்து நாட்டை மீட்­டெ­டுக்க  ஒரு­போதும் பின்­னிற்க மாட்டோம்.

 அதில் மாநா­யக்க தேரர்­களின் பங்­க­ளிப்­பையே எதிர்­பார்ப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ஷ நேற்று முன்­தினம் திரு­கோ­ண­ம­லையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் இதனைக் குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் உரை­யாற்­று­கையில்

இந்த நாட்டின் பிரச்­சி­னை­களை தீர்க்க சர்­வ­தேச நீதி­ப­தி­களை வர­வ­ழைக்க வேண்டும் என கூறு­கின்­றனர். சிலர் தேசிய வாதம் பேசிக்­கொண்டு ஜெனிவா சென்று அங்கு எமது நட­வ­டிக்­கை­களை காட்­டி­கொ­டுத்­துள்­ளனர். சர்­வ­தேச நீதி­ப­தி­களை அனுப்­புங்கள் இலங்­கையில் சகல அனு­ம­தி­க­ளையும் வழங்­கு­கின்றோம் என இவர்கள் கூரு­கி­னனர்.

இந்த அனு­ம­தியை அடுத்தே சர்­வ­தேச விசா­ர­ணை­யா­ளர்கள் இலங்­கைக்கு வந்­தனர். என்­னி­டமும் வந்­தனர். ஆனால் நான் அவர்­களின் கார­ணி­களை காதில் கேட்­க­வில்லை. அவர்­களை விரட்­டி­விட்டேன். எமது இரா­ணு­வத்தை தண்­டிக்க நினைக்கும் சர்­வ­தேச தரப்­பி­ன­ருக்கு இட­ம­ளிக்க முடி­யாது என நான் கூறும்­போது ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­களில் இருந்து கொண்டு அர­சியல் செய்யும் அர­சி­யல்­வா­திகள் என்னை இன­வா­தி­யாக சித்­த­ரிக்­கின்­றனர். சர்­வ­தேச விசா­ர­ணைக்கு நான் தடை­யாக உள்­ள­தா­லேயே என்னை இலக்கு வைத்து விமர்­சித்து வரு­கின்­றனர்.

மேலும் நீதி­மன்ற சுயா­தீ­னத்தில் அர­சியல் தலை­யீ­டுகள் இருக்க கூடாது அதற்கு நீதி அமைச்சு அனு­ம­திக்­காது என நான் கூறும்­போதும் நான் இன­வாதி என கூறுகின்றனர். சிங்­கள மக்கள் தொடர்பில் அவர்­களின் உரி­மை­களை பற்றி பேசும்­போது நாம் இன­வாதி ஆகின்றோம்.

பெளத்த சாச­னத்தை பாது­காக்க குரல் எழுப்பும் நபர்­களை இன­வாதி என சித்­த­ரிக்க பழ­கி­யுள்­ளனர். ஆனால் இவ்­வாறு எம்மை சித்­த­ரிக்கும் நபர்­களை பொறுத்­த­வ­ரையில் நாம் இன­வா­தி­க­ளாக இருக்­கின்றோம் ஆனால் எமக்­கான கட­மை­களை நாம் சரி­யாக செய்­கின்றோம். அதில் ஏற்­படும் முரண்­பா­டு­களை சகல வகை­யிலும் எதிர்­கொள்ள நாம் தயா­ராக உள்ளோம்.

எமது சொத்­துக்­களை நாம் பாது­காக்க வேண்டும். நாம் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு ஆட்­சியை கையில் எடுத்­துள்ளோம். எனவே இந்த காலத்தில் எவ்­வாறு ஆட்சி செய்ய வேண்டும், எமது நிலங்­களை எவ்­வாறு பாது­காக்க வேண்டும் என்­பதை அறிந்­து­கொள்ள வேண்டும். இன்று நாம் மிகவும் இறுக்­க­மான காலத்தில் வாழ்ந்­து­கொண்டு உள்ளோம்.

நாட்­டையும் தேசி­யத்­தையும் பாது­காக்க பெளத்த சங்­கத்­தினர் முன்­வ­ர­வேண்­டிய காலம் வந்­துள்­ளது. பெளத்த மாநா­ய­கர்கள் தலைமை ஏற்­க­வேண்­டிய காலம் வந்­துள்­ளது. எமக்குள் பிரச்­சி­னைகள் உள்­ளன, அர­சியல் குழப்­பங்கள் உள்­ளன. ஆனால் நாம் அவற்றை தீர்க்க வேண்டும். இந்த நாட்டின் அர­சியல் தலை­வர்­க­ளுக்கு மிக முக்­கி­ய­மான பொறுப்­புகள் உள்­ளன. நாட்டின் உண்­மை­யான தேசிய அர­சியல் வாதிகள் யார் என்­பதை இவர்கள் அடை­யாளம் காண­வேண்டும். நாட்டை நேசிக்கும் நபர்கள் யார் என்­பதை அடை­யாளம் காண­வேண்டும். மாறாக எவ­ரதும் தனிப்­பட்ட தேவை­களை அர­சியல் நோக்­க­மாக மாற்­றக்­கூ­டாது.

  நாட்டில் டெங்கு நோய் அனை­வ­ரையும் பாதித்து அதிக உயி­ரி­ழப்­புகள், லட்சக் கணக்­கான மக்கள் பாதி­கப்­பட்ட போதிலும் சுகா­தார அமைச்­ச­ருக்கு சைட்டம் நிறு­வ­னத்தை காப்­பாற்ற வேண்டும் என்­பதே பிர­தான நோக்­க­மாகும்.நாட்டில் கற்ற சமூகம் வளர்ச்சி காணா­விட்­டாலும் பர­வா­யில்லை சைட்டம் பாது­காக்­கப்­பட வேண்டும் என்ற தனிப்­பட்ட கார­ணி­களை அவர் சிந்­திக்­கின்றார். இன்று சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்­தையும், நீதி மன்­றத்­தையும் சுகா­தார அமைச்சர் கட்­டு­ப­டுத்த முயற்­சிக்­கின்றார். அப்­ப­டி­யாயின் சுகா­தார அமைச்சின் வேலை­களை யார் செய்­வது?

70 ஆண்­டு­கா­ல­மாக கட்சி அர­சி­யலில் செய்ய முடி­யா­ததை தேசிய அர­சாங்­கத்தில் செய்­யவே இரண்டு கட்­சி­களும் இணைந்து ஆட்சி அமைத்­தன. ஆனால் தேசிய அர­சாங்­கத்தில் நாட்­டுக்கு தேவை­யான நகர்­வுகள் இடம்­பெ­ற­வில்லை. ஆகவே அதற்­கான மாற்று நகர்­வுகள் என்­ன­வென்­பதை இந்த நாட்டின் மாநா­யக தேரர்கள் தீர்­மா­னிக்க வேண்டும்.

இந்த நாட்டு மக்­களும் சரி­யான அர­சியல் பாதையை தெரி­வு­செய்ய வேண்டும். ஆளத் தெரியாதவர்கள் ஆட்சியை கையில் எடுத்தால் நாடு சீரழியும் என்ற பழைய கருத்துக்கு அமைவாக இன்றும் ஆட்சி நடந்து வருகிறது.

அதற்கான தண்டனையை இன்றும் நாம் அறிந்து வருகின்றோம். ஆகவே இந்த காலத்தில் மீண்டும் அரசியல் மாற்றத்தை செய்து நாட்டை மீட்டெடுக்க ஒருபோதும் பின்னிற்க மாட்டோம். அரசியலில் நியாயமான வகையில் நான் ஈடுபட்டு வருகிறேன். எவரது தனிப்பட்ட தேவைக்காக என்னால் அரசியல் செய்ய முடியாது என்றார்.
(முழு உரை இணைப்பு) நாட்­டையும், தேசி­யத்­தையும் பாது­காக்க பெளத்த சங்­கத்­தினர் முன்­வ­ர­வேண்­டிய காலம் வந்­துள்­ளது. (முழு உரை இணைப்பு) நாட்­டையும், தேசி­யத்­தையும் பாது­காக்க பெளத்த சங்­கத்­தினர் முன்­வ­ர­வேண்­டிய காலம் வந்­துள்­ளது. Reviewed by Madawala News on 8/21/2017 11:06:00 AM Rating: 5