Kidny

Kidny

இந்த நாட்டில் இனவாதம் வளர பிரித்தானியாவே காரணம்.


சாதாரண விடயங்கள் என கருதி கைவிட்ட அரசியல் விடயங்களே இறுதியில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது.

வடக்கு, கிழக்கு ஆயுத மோதலுக்கும் இளைஞர் புரட்சிக்கும் எமது அரசியல் கொள்கையே காரணமாக அமைந்தது என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

இவற்றை மாற்றியமைக்க நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இனவாதம் என்பதை விடுத்து இன ஐக்கியத்தில் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் முன்செல்ல வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் மற்றும் அரசியல் தலைமைத்துவம் தொடர்பிலான கற்கைக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று இலங்கை மன்ற கல்லூரியில் இடம்பெற்றது. இதில் அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்த நாட்டில் இனவாதம் பலமடைய டொனமூர் அரசியல் அமைப்பே காரண மாக அமைந்தது. வெளிநாட்டவரின் கொள்கையில் இலங்கையில் இனவாதம் பலப்ப டுத்தப்பட்டது என்பதே உண்மையாகும். இதனை இன்றும் நாம் அனுபவித்து வரு கின்றோம்.

பிரித்தானிய ஆதிக்கவாதிகள் இந்த கொள்கையை வேண்டுமென்றே இலங் கையில் உருவாக்கினர். அவர்களது ஆதிக்கத்தைதக்கவைக்க இதனை முன்னெடுத் தனர்.

அவர்கள் உருவாக்கிய இனவாத, பிரிவினைவாத கொள்கையில் இருந்து மீண்டு எழ முடியாத நிலையில் இன்றும் அதில் இருந்து தப்பிக்க நாம் முயற்சித்து வருகின்றோம்.

 உலகில் எங்கும் இல்லாத அளவில் இலங்கையில் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர் இன அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டும் என்ற கொள்கையை உருவாக்கி கொடுத்தனர்.

ஒவ்வொரு இனத்தவருக்கும் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்ட அர சியல் கொள்கை உருவாக்கப்பட்டது. இவ் வாறே ஜனநாயகம் எமது நாட்டில் உருவாக் கப்பட்டது. இந்த கொள்கை வேறு எந்த நாட்டில் இருக்கின்றதா என்பது எனக்கு தெரியாது.


இந்த அரசியல் செயற்பாடே இலங்கையில் இளைஞர் கிளர்ச்சி, வடக்கு கிழக்கின் யுத்தம், இனவாத முரண்பாடுகள் அனைத் திற்கும் காரணமாக அமைந்தது. சிறிய முரண்பாடுகள் என கருதி கைவிட்ட பிரச் சினைகள் இறுதியில் மிகப்பெரிய அழிவு வரையில் சென்றமையே உண்மையாகும். இன்றும் நாம் இனவாதத்தை அடிப்படை யாக வைத்தே அரசியல் முன்னெடுத்து வருகின்றோம். 

எமது பிரிவினைவாத அரசியல் நகர்வுகளே இன்றுவரையில் தீர்வு ஒன்றை சிந்திக்க முடியாத நிலைமைக்கு தள் ளியுள்ளது. இவற்றில் இருந்து விரைவாக மீள வேண்டும். இப்போதும் இவை சாதாரண பிரச்சினைகள் என கருதினால் பாரிய அழிவில் முடிவடையும். புகழைத் தேடும் அரசியல் பயணம் நாட் டுக்கு ஒருபோதும் பொருந்தாது. 

ஆனால் இன்று இலங்கை இந்த நிலைமைக்கு தள் ளப்பட்டுள்ளது. அதற்கு விருப்பு அரசியல் கொள்கையே பிரதான காரணமாகும். இன்று இலங்கையில் மூன்று அரசியல் செயற் பாடுகள் உள்ளன. பாராளுமன்ற அரசியல், மாகாணசபை அரசியல், பிரதேசசபை அரசியல் என மூன்று அரசியல் உள்ளன. ஆனால் இன்று அவை அனைத்தும் ஒன்றாக மாறியுள்ளது. இதில் இருந்து எம்மால் விடுபட முடியாத நிலையில் உள்ளோம். இப்போது இவற்றை மாற்றியமைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இனவாதம் என்பதை விடுத்து இன ஐக் கியத்தில் இலங்கையர்கள் என்ற அடிப்ப டையில் முன்செல்ல வாய்ப்பு கள் அமைந்துள்ளன. 

நாம் எமது நாட்டுக் காகவும். மக்களுக்காகவும், நாட்டின் வளங்களுக்
காகவும் அரசியல் செய்கின்றோம். இனி வரும் இளம் அரசியல் பரம்ப ரையும் இதனை கருத்திற் கொண்டு செயற்பட வேண் டும் என்பதே எம் அனைவரதும் எதிர்பார்ப் பாகும் என்றார்.

இந்த நாட்டில் இனவாதம் வளர பிரித்தானியாவே காரணம். இந்த நாட்டில் இனவாதம் வளர பிரித்தானியாவே காரணம். Reviewed by Madawala News on 8/14/2017 10:40:00 AM Rating: 5