Ad Space Available here

விஜேதாஸ குறித்து இன்று தீர்மானம். பரபரப்பான சூழலில் முடிவெடுக்க கூடுகிறது ஐ.தே.க. எம்.பி.க்கள் குழு.


அமைச்சர் விஜே­தாஸ ராஜபக்ஷ தொடர்பான சர்ச்சைகளை ஆராய்­வ­தற்­காக ஐக்­கிய தேசியக் கட்­சியின் மத்­திய செயற்­கு­ழுவால் நிய­மிக்­கப்­பட்ட மங்­கள சம­ர­வீர, மலிக் சம­ர­விக்­கி­ரம மற்றும் ரவீந்­திர சம­ர­வீர ஆகிய மூன்று எம்.பி.க்கள் அடங்­கிய குழுவின் அறிக்கை இன்­றை­ய­தினம் கூட­வுள்ள ஐ.தே.க.வின் பாரா­ளு­மன்றக் குழு­வி­டத்தில் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் அமைச்சர் விஜே­தாஸ தொடர்பில் இன்­றைய தினம் தீர்க்­க­மான தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது.

பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தலை­மையில் கூட­வுள்ள இன்­றைய பாரா­ளு­மன்றக் குழுக் கூட்­டத்தில் இது தொடர்பில் விசே­ட­மாக ஆரா­யப்­பட்டு இறுதி முடிவு எடுக்­கப்­படும் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  

நீதி அமைச்­சரும் புத்த சாசன அமைச்­ச­ரு­மான விஜே­தாஸ ராஜ­பக்ஷ குறித்த பத­வியில் இருக்கும் வரையில் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வுக்கு எதி­ரான விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு தடை­யாக இருப்பார் என்றும் அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்தம் தொடர்­பாக நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக்ஷ வெளி­யிட்­டுள்ள கருத்­துக்கள் கட்­சியின் கொள்­கைக்கு நேரெ­தி­ராக காணப்­ப­டு­கின்­றன எனவும் அண்­மையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பின்­வ­ரிசைப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தனர்.

ஆகவே அமைச்சர் வெளிப்­ப­டுத்­திய கருத்­துக்­களை பகி­ரங்­க­மாக மீளப்­பெற்­றுக்­கொள்ள வேண்டும் எனக் குறிப்­பிட்டு ஐக்­கிய தேசியக் கட்­சியின் பின்­வ­ரிசைப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நீதி அமைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னத்­தினை எடுத்­தி­ருந்­தனர். இது குறித்து கட்­சியின் தலை­வரும், பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டத்­திலும் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர்.

அதன்­பி­ர­காரம் கடந்த புதன்­கி­ழமை ஐக்­கிய தேசியக் கட்­சியின் மத்­திய செயற்­குழு கூட்டம் நடை­பெற்­றி­ருந்­தது. இக்­கூட்­டத்தில் அமைச்சர் விஜே­தா­ஸ­வுக்கு எதி­ராக கடு­மை­யான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. குறிப்­பாக அவர் நீதி அமைச்­சுப்­ப­த­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமச் செய்ய வேண்டும் என்று பல உறுப்­பி­னர்­களால் வலி­யு­றுத்­தப்­பட்­டன.

அனைத்து விமர்­ச­னங்­க­ளையும், எதிர்ப்­புக்­க­ளையும் அமை­தி­யாக கேட்­டுக்­கொண்­டி­ருந்த அமைச்சர் விஜே­தாஸ தனது நிலைப்­பாடு தவ­றா­னது அல்ல என்­ப­தைய மையப்­ப­டுத்தும் வகையில் திட்­ட­வட்­ட­மாக கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்தார். இதனால் கட்­சி­யினுள் வாதங்கள் வலுத்­தி­ருந்த நிலையில் பிர­தமர் ரணிலின் பணிப்­பு­ரைக்கு அமை­வா­கவும் உறுப்­பி­னர்­களின் இணக்­கப்­பாட்­டு­டனும் நீதி அமைச்சர் தொடர்­பான விட­யங்­களை ஆராய்­வ­தற்­காக அமைச்­சர்­க­ளான மங்­கள சம­ர­வீர, மலிக் சம­ர­விக்­கி­ரம, மற்றும் ரவீந்­திர சம­ர­வீர எம்.பி ஆகியோர் அடங்­கிய குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது.

அக்­கு­ழு­வா­னது அமைச்சர் விஜே­தாஸ குறித்து மூன்று நாட்­க­ளாக ஆராய்ந்த விட­யங்­களை அறிக்­கை­யாக இன்­றை­ய­தினம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெறும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழு கூட்­டத்­தின்­போது சமர்ப்­பிக்­க­வுள்­ளது. இத­னை­ய­டுத்து தீர்க்­க­மான தீர்­மா­ன­மொன்று ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் எடுக்­கப்­படும் என அறி­ய­மு­கின்­றது.

நிலைப்­பாட்டில் மாற்­ற­மில்லை

எவ்­வா­றா­யினும் அமைச்சர் விஜே­தாஸ தனது நிலைப்­பாட்­டினை மாற்றிக் கொண்­ட­தாக இல்லை. அத்­துடன் தனது மனச்­சாட்­சிப்­ப­டியும் நாட்டின் எதிர்­காலம் கரு­தி­யுமே குரல்­கொ­டுப்­ப­தா­கவும் கடந்த தினங்­களில் பௌத்த மத­கு­ருமார் உட்­பட பொது­மக்­க­ளி­டத்­திலும் சுட்­டிக்­காட்­டி­யுள்ள அவர் சட்­டமா அதிபர், திணைக்­களம், நீதித்­துறை ஆகி­ய­வற்­றினுள் தலை­யீ­டு­களைச் செய்த ஆட்­சி­யா­ளர்கள் சம்­ராஜ்­யத்­தினை இழந்­ததே இலங்கை வர­லாறு என்றும் காட்­ட­மாக குறிப்­பிட்­டுள்ளார்.


இதே­வேளை இன்று திங்­கட்­கி­ழமை இரவு ஒன்­பது மணிக்கு ஐக்­கிய மக்கள் முன்­ன­ணியில் உள்ள கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்கும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் முக்­கிய சந்­திப்­பொன்று இடம்­பெ­ற­வுள்­ளது. இச்­சந்­திப்­புக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் அழைக்­கப்­பட்­டுள்­ளது.

கிழக்கு, சப்­ர­க­முவ, வட­மத்­திய மாகா­ணங்­க­ளுக்­கான ஆயுட்­காலம் நிறை­வுக்­கு­வ­ர­வுள்ள நிலையில் அவற்றின் காலத்­தினை நீட்டி அனைத்து மாகா­ணங்­க­ளுக்கும் ஒரே தட­வையில் தேர்­தலை நடத்­து­வ­தற்­காக அர­சி­ய­ல­மைப்பில் 20ஆவது திருத்­த­மொன்றை மேற்­கொள்­வ­தென ஐக்­கிய தேசியக் கட்சி எடுத்­துள்ள தீர்­மானம், ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி மத்­திய குழு அத்­தீர்­மா­னத்­தினை ஆத­ரிப்­ப­தில்­லை­யென தீர்­மா­னித்­துள்­ளமை மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்கு கூட்­டணி ஆகி­ய­னவும் அத்­தீர்­மா­னத்­துக்­கான இணக்­கப்­பாட்­டினை தெரி­விக்­காமை தொடர்பில் ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்­பின்­போது கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

அதே­நேரம் அமைச்சர் விஜே­தாஸ சம்­பந்­த­மா­கவும் குறித்த சந்­திப்­பின்­போது கலந்­து­ரை­யா­டப்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தனால் இக்­கூட்டம் பல்­வேறு எதிர்­பார்­பு­க­ளுக்கு மத்­தியில் நடை­பெ­று­கின்­றது.

  புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையை வெளி­யி­டு­வதில் பிர­தான கட்­சி­யான சுதந்­தி­ரக்­கட்சி காட்டும் தாமதம் குறித்தும் கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது.

குறிப்­பாக வழி­ந­டத்தல் குழவில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பிர­தி­நி­திகள் ஜனா­தி­பதி முறைமை, நாட்டின் தன்மை குறித்து தமது கட்­சியின் நிலைப்­பாட்­டினை; இடைக்­கால அறிக்கை வரைபில் இணைத்­துக்­கொள்­வ­தற்கு தொடர்ச்­சி­யாக கால அவகாசத்தினைக் கோருகின்றபோதும் தற்போது வரையில் முன்மொழிவை சமர்ப்பிக்காத நிலைமை தொடர்கின்றது.

ஆகவே அதற்கான காரணங்கள் உள்ளிடவற்றை ஜனாதிபதியுடன் பரஸ்பரம் கலந்துரையாடி இறுதி முடிவொன்றை எட்டுவதற்கு கட்சித்தலைவர்கள் முனைப்புக்காட்டலாம் என தெரியவருகின்றது.

பதவி விலகியே ஆக வேண்டும்.

 அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ பதவி விலகியே ஆகவேண்டும் என்று வலியுறுத்தும் ஐ.தே.க. வின் பின்வரிசைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு அமைச்சர் பதவி விலகுவதற்கு மறுத்தால் அதற்கு எதிராக ஒருங்கிணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை நிச்சயம் எடுப்போம் எனவும் நம்பிக்கையில்லாப்பிரேரணையைக் கொண்டுவருவது தமது நோக்கமல்லவெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விஜேதாஸ குறித்து இன்று தீர்மானம். பரபரப்பான சூழலில் முடிவெடுக்க கூடுகிறது ஐ.தே.க. எம்.பி.க்கள் குழு. விஜேதாஸ குறித்து இன்று தீர்மானம். பரபரப்பான சூழலில் முடிவெடுக்க கூடுகிறது ஐ.தே.க. எம்.பி.க்கள் குழு. Reviewed by Madawala News on 8/21/2017 10:55:00 AM Rating: 5