Kidny

Kidny

விஜேதாஸ் ராஜபக்ஷவுக்கு ஆதரவாக, புத்தசாசன அமைச்சுக்கு வெளியே திரண்ட தேரர்கள் தெரிவித்தவை.


நீதி மற்றும் புத்த சாசன அமைச்சில் இருந்து அமைச்சர் விஜேதாஸ் ராஜபக்ஷ நீக்கப்படக்கூடாது. அவரை பாதுகாக்க ஜனாதிபதி, பிரதமர் முன்வரவேண் டும் என சகல பெளத்த பீடங்களின் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட தேவைகளுக்காக நாட்டின் தேசிய ஒற்றுமையில் குழப்பங்களை ஏற் படுத்தக்கூடாது என்பதே பிரதான பீடங் களின் வேண்டுகோள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் விஜேதாஸ் ராஜபக்ஷ தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் முன் னெடுக்கவுள்ளதாக கருத்துக்கள் முன்வைக் கப்பட்டு வரும் நிலையில் நாட்டின் சகல பகுதிகளில் இருந்தும் வந்த பெளத்த பிக்குகள் நீதி மற்றும் பெளத்த சாசன அமைச் சர் விஜேதாஸ் ராஜபக்ஷவின் நலன் கருதிய ஆசிவழங்கும் செயற்பாட்டை நேற்று பெளத்தசாசன அமைச்சில் முன்னெடுத்தனர்.

அதன் பின்னர் தேரர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், பெளத்த சாசன மற்றும் நீதி அமைச்சர் விஜேதாஸ் ராஜபக் ஷவின் நலன் கருதிய ஆசீர்வாத பூஜையை நாம் முன்னெ டுத்தோம். அனைத்து பீடங்களையும் சேர்ந்த நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள தேரர்கள் இணைந்து அமைச்சருக்கான ஆசி பூஜையை நடத்தியுள்ளோம்.


யாழ்.நாகதீபம், மன்னார் பகுதிகளில் இருந்தும் பெளத்த தேரர்கள் வருகை தந்துள்ளனர்.

அமைச்சர் தொடர்பில் காரசாரமான கருத்துக்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஆனால் அவர் தொடர்பிலான அரசியல் கருத்துக்கள் தொடர்பில் எம்மால் எந்த கருத்துக்களும் தெரிவிக்க முடியாது. எனினும் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்ப டுத்த இடமளிக்காத வகையில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் செயற்படுவர் என்ற நம் பிக்கை எமக்கு உள்ளது.

மாநாயக்க தேரர் களும் இந்த நிலைப்பாட்டினை முன்வைத்துள்ளனர். அமைச்சர் தொடர்பிலான விடயங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்படப்போவதாக கூறியுள்ள போதிலும் எவ்வாறான மாற்றங்கள் என்பது குறித்து எமக்கு தெரியவில்லை.

எனினும் அவர் அரசாங்கத்தில் இருக்க வேண்டிய முக்கியமான நபர் கல்விமான் என்பதுடன் நல்ல மனிதர் அவர் அமைச்சர் விஜேதாஸ் ராஜபக்ஷ அனைத்து அமைச்சு களுக்கும் தகுதியான நபர் பெளத்த சாசன அமைச்சு அவரிடம் இருக்கவேண்டும்.

அவர் மிகச்சிறந்த பெளத்தர். அவர் நாட் டின் பெளத்த விகாரைகள் தொடர்பில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார். அவர் தொடர்ந்தும் பெளத்த சாசன மற்றும் நீதி அமைச்சில் இருக்க வேண்டும்.

அவர் நாட்டிற்காகவும் பெளத்த சமயத்திற் காகவும் பாரிய சேவைகளை செய்துள்ளார். ஆகவே அவரை ஜனாதிபதி மற்றும் பிர தமர் பாதுகாக்க வேண்டும். இன்று வடக்கு கிழக்கில் பெளத்த விகாரைகளை பாது காக்கும் பொறுப்பை அமைச்சர் விஜேதாஸ் ராஜபக்ஷ மேற்கொண்டு வருகின்றார்.

ஆகவே அவரை நாம் பாதுகாக்க வேண் டும். அதற்காக நாம் ஒன்றிணைவோம். தொடர்ந்தும் அவர் உரிய அமைச்சில் இருந்து எமக்கு உதவ வேண்டும். அதையும் மீறி மாற்றம் ஏற்பட்டால் இந்த நாட்டில் நல்ல ஆட்சி இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.

தூய்மையான ஆட்சி என்றால் என்னவென்பது இன்று புதிய அமைச்சர்க ளுக்கு தெரியவில்லை. ஆகவே அவர்களுக்கு அதனை கற்றுத் தர வேண்டும். நீதித்துறையில் தெளிவான அறிவு உள்ள ஒரு அமைச்சர் அவர். ஆகவே அவரை மாற்றக் கூடாது. அவரவருக்கு தேவைப்படும் விதத்தில் அமைச்சுக்களை வைத்துகொண்டு தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என்றால் அதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்க முடியாது.

கட்சி பேதம் எம்மத்தியில் இல்லை. ஆனால் நாடு என்ற ரீதியில் அனைவரும் ஒரு திசையில் பயணிக்க வேண்டும் என்றார்.

விஜேதாஸ் ராஜபக்ஷவுக்கு ஆதரவாக, புத்தசாசன அமைச்சுக்கு வெளியே திரண்ட தேரர்கள் தெரிவித்தவை. விஜேதாஸ் ராஜபக்ஷவுக்கு ஆதரவாக, புத்தசாசன அமைச்சுக்கு வெளியே  திரண்ட தேரர்கள் தெரிவித்தவை. Reviewed by Madawala News on 8/22/2017 10:36:00 AM Rating: 5