Ad Space avaiable

ரோஹிங்யா அகதிகள் விவகாரம் தொடர்பான முழு விளக்கம் ..



-சட்டத்தரணி சிராஸ் நூர்தீன்- 

1. இலங்கை வர முன்னிருந்த நிலை*

1.1 இப் பிணக்கிற்குறிய குழு 32 நபர்களைக் கொண்டது. அக்குழுவில் மியன்மாரைச் சேர்ந்த 30 பேரும் இந்தியாவைச் சேர்ந்த 02 உம் அடங்குவர். அவர்களில் வயது வந்த ஆண்கள் 09 பேரும் வயது வந்த பெண்கள் 07 பேரும் பெண் குழந்தைகள் 08 பேரும் ஆண் குழந்தைகள் 08 பேரும் உள்ளனர்.

1.2 இம் மியன்மாரைச் சேர்ந்த குழுவினர் மியன்மாரிலிருந்து இந்தியாவுக்கு வந்து இந்தியாவில் சுமார் 05 வருடங்கள் வசித்து வந்துள்ளனர்.

1.3 இக்குழு இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வந்ததுடன் இந்தியாவில் ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் காரியாலயம் மூலம் அகதி அடையாள அட்டையும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

1.4 அவசரமாக வெளியிடப்பட்ட செய்தி ஒன்றின் அடிப்படையில், இந்திய அரசினால் அவர்கள் மீண்டும் மியன்மாருக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற அச்சதில் படகொன்றின் மூலம் வேறொரு நாட்டிற்கு தப்பிச்செல்ல முயற்சித்துள்ளனர்.

1.5 அதற்காக இந்தியர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் அவர்களுடன் வேறொரு நாட்டிற்கு செல்வதற்காக நாகபட்டின கடற்கரையிலிருந்து படகொன்றில் வெளியாகியுள்ளனர்.

*2. இலங்கை வருகை*

2.1 அவ்வாறு பயணம் செய்து கொண்டிருக்கும் போது இலங்கை கடலெல்லைக்குள் நுழைந்ததன் காரணமாக அத்துமீறி நுழைந்ததன் அடிப்படையில் இலங்கைகடற்படையின் கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் 2017-04-30ம் திகதி அவர்களின் கட்டுப்பாட்டில் காங்கேசந்துறை பொலிஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

2.2 அவ்வாறு கைது செய்தவுடன் இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்துக்கு அறிவிக்கப்பட்டதுடன் அக்காரியாலய அதிகாரிகளினால் இக்குழுவினர் இந்தியாவில் வசித்த அகதிகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

2.3 இதன் பிரகாரம் காங்கேசந்துறை பொலிஸ்பரீட்சகர்கள் மூலம் *1948ம் ஆண்டின் 20ம் இலக்க குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 45 மற்றும் 45 அ உறுப்புரைகளின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை சமர்பிக்கப்பட்டு இல B/ 372/17 கீழ் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.*

2.4 அங்கு மாண்புமிகு நீதவானின் மூலம் இவ்விடயம் சம்பந்தமாக சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள ஆற்றுப்படுத்தப்பட்டதுடன் அதுவரை மியன்மாரைச் சேர்ந்தோரை மிரிகானை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கும்படியும் இந்தியர்கள் இருவரையும் தடுப்புக்காவலில் வைக்கும்படியும் கட்டளையிடப்பட்டது.

2.5 சட்டமாஅதிபரின் ஆலோசனைக்கிணங்க, அந்த மியன்மாரைச் சேர்ந்தோர் இந்திய அகதிகளாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால் அவர்களுக்கெதிராக 1948ம் ஆண்டின் 20ம் இலக்ககுடிவரவுகுடியகல்வுசட்டத்தின் 45 மற்றும் 45 (அ) உறுப்புரைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் எடுக்காமலிருக்கும் படி ஆலோசனை வழங்கப்பட்டதுடன் அதன் படி மியன்மாரைச் சேர்ந்த 30  பேர் மற்றும் அவர்களில் ஒருவருக்கு இந்நாட்டில் பிறந்த குழந்தையுடன் 31 நபர்களையும் இவ்வழக்கிலிருந்து விடுவித்து , குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினூடாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்பான உயர்ஸ்தானிகரிடம் ஒப்படைக்கும் படி கட்டளையிடப்பட்டது. அவ்வாறே இந்தியர் இருவரையும் தடுப்புக்காவலில் வைக்கும்படியும் கட்டளையிடப்பட்டது.

2.6 அதன் பிரகாரம் மியன்மாரைச் சேர்ந்த அனைவரும் (UNHCR) நிறுவனத்தின் வழிகாட்டலில் நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் வரை மிரிகானை தடுப்பு முகாமில் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

*3. மிரிகானை தடுப்பு முகாமில் இருந்து கல்கிஸ்ஸைக்கு இடம் மாற்றப்படல்*

3.1 இவ்வாறு அக்குழுவினர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது அவர்களில் ஒரு இளம் பெண் அத்தடுப்புமுகாமிய பொலிஸ் அதிகாரி ஒருவர் மூலம் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உற்படுத்தப்பட்டதுடன் இது தொடர்பில் *இல B/2030/17 கொண்ட வழக்கு நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் விசாரனைக்குட்படுத்தப் பட்டு வருகிறது.*

3.2 இப் பதுகாப்பற்ற சூழ் நிலைகளை கருத்திற் கொண்டு அவர்களுக்கு பொருப்பாக விருந்த UNHCR நிருவனம் மூலம் அவசிய நீதிமன்ற அனுமதியுடன் பொலிஸ் பாதுகாப்புடன் தற்காலிகமாக அக் குழுவினர் கல்கிஸ்சை பிரதேசத்தில் கூலி வீடொன்றில் தங்க வைக்கப் பட்டனர்.

3.3 இது தொடர்பில் பொலிஸ் மற்றும் சம்பந்தப் பட்ட அனைத்து நிருவனங்களுக்கும் அறிவித்த பின்பே தற்காலிக இருப்பிடம் வழங்கப் பட்டது.

*4. மியன்மார் அகதிகள் இதற்கு முன் இலங்கை வந்துள்ளனரா?*

4.1 உள் விவகார அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் 2017/09/18ம் திகதி வெளியிடப் பட்ட ஊடக அறிக்கையின் படி மியன்மார் அகதிகள் இதற்கு முன் இலங்கை வந்த விதம் மற்றும் அவர்கள் தொடர்பில் செயற்பட்ட விதமும் விபரிக்கப் பட்டுள்ளது.

4.2 அதன் படி மியன்மாரைச் சேர்ந்த 55 நபர்கள் கொண்ட குழுவை 2008-03-03ம் திகதி இலங்கை கடற் படை இலங்கை கடற் பரப்பினுல் கைது செய்துள்ளதுடன் அவர்களை  ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்பான உயர்ஸ்தானிகரிடம் UNHCR இடம் ஒப்படைக்கப் பட்டதுடன் 2012 ஜூலை மாதமளவில் அனைவரும் நாட்டிலிருந்து வெளியேற்றப் பட்டனர்.

4.3  2013 பெப்ரவரி மாதம் மீண்டும் இலங்கை கடற் படை இலங்கை கடற் பரப்பினுல் 170 மியன்மார் பிரசைகளை கைது செய்துள்ளதுடன் அவர்களை  ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்பான உயர்ஸ்தானிகரிடம் UNHCR இடம் ஒப்படைக்கப் பட்டதுடன் 2015 நவம்பர் மாதமளவில் அனைவரும் நாட்டிலிருந்து வெளியேற்றப் பட்டனர்.

4.4 விசேடமாக அவ்வூடக அறிக்கையில் குறிப்பிடப் பட்டதற்கிணங்க இலங்கை அரசு இவ் அகதிகள் விடயத்தில் சரியான வழிமுறைகளை பின் பற்றியுள்ளதுடன் நெறியான வழிமுறைகளின் படியே அக் குழு தொடர்பில் அவசிய அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப் படுமென் உறுதி படுத்தியுள்ளது.

4.5 அதன் பிரகாரம் 31 நபர்களைக் கொண்ட மியன்மார் அகதிகள் குழுவையும் தீவிலிருந்து வெளியேற்ற அவசிய அனைத்து ஆலோசனைகள் மேற்கொள்ளப் பட்டு அவர்கள் வெளியேற்றப் படவிருந்த இச் சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட ஒரு நபரின் அல்லது ஒரு குழுவின் தவறான வழிகாட்டலில் இந்த அசாதாரண சூழ்நிலை உறுவாகியுள்ளது.

*5. 2017-09-26 ம் திகதி நிகழ்ந்த சம்பவம்*

5.1 உண்மை நிலை மேற்போர்ந்தவாறு உள்ளபோது, சில அடிப்படைவாத குழுவின் மூலம் சமூக வலைதலங்களினூடாகவும் ஏனைய பல்வேறு ஊடகங்களினூடாகவும் இந்த மியன்மார் பிரசைகள் தொடர்பில் பொய்யான தகவல்கள் பிரசாரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.

5.2 அதன் படி அந்த நபர்களின் அல்லது குழுவின் நடவடிக்கைகள் மூலம் தவறான வழியில் இட்டுச் செல்லப் பட்டு உண்மையான தகவல் திரட்டியோ அல்லது அது தொடர்பில் ஆய்வு செய்து தேடிப் பார்க்காமல் ஒன்று குழுமிய அக்குழு மியன்மார் அகதிகள் தங்க வைக்கப் பட்டிருந்த வீட்டை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெறிவித்ததையடுத்து அந்த அகதிகளின் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களை பொலிஸ் பொறுப்பெடுத்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

5.3 ஆயினும் மீண்டும் அவர்களை அவ்விடத்தில் குடியமர்த்துவது தொடர்பில் எழுந்த கடும் எதிர்ப்பினால்  அவர்களின் பாதுகாப்பு கருதி புஸ்ஸ தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப் பட்டனர்.

5.4 இருந்த போதிலும் உண்மை நிலமையை மாற்றியமைத்து தமது அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு ஒரு குழுவினால் பிரச்சாரம் செய்யப்பட்ட பொய்யான தகவல்கள் அடிப்படையில் போதிய அறிவின்மையின் காரணமாக ஏற்படுத்தப் பட்ட சூழ்நிலையே என தெறிவிக்கப் படுகிறது.

*பிற்குறிப்பு*

இலங்கை  ஏறக்குறைய 03 தசாப்த கால யுத்தத்தினால் பாதிக்கப் பட்டு படிப்படியாக சீரான நிலைக்கு திரும்பும் இத்தருனத்தில், நாட்டை சீர் குழைக்கும் சூழ்ச்சிகள் பல்வேறு விதங்களில் உறுவாகலாம். விசேடமாக நல்லினக்கத்துடனும் சகோதர வாஞ்சையுடனும் வாழ்ந்து வரும் பௌத்த மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில், அவ்விரு சமூகங்களையும் சார்ந்த சொற்பமான அடிப்படைவாத நபர்களால் திட்டமிட்டு செயற்படுத்தப்படும் இவ்வாறான தவறான வழிகாட்டல்களை அடையாளம் காண்பது இன்றியமையாதது..
அடிப்படைவாதத்தினூடாக இன மத மோதல்களை நாட்டில் உருவாக்கும் நோக்குடன் செயற்படும், குறிப்பாக அவ்வாறான நடவடிக்கைகளில் முன்னனி வகிக்கும் நபர்களுக்கெதிராக நாடளாவிய ரீதியில் பல்வேறு நீதி மன்றங்களில் பல வழக்குகள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அந் நீதிமன்றங்களினால் வழங்கப்படும் தீர்ப்புகளை மதியாது நீதிமன்றத்தையே அவமதிக்கும் வகையில் நாட்டிற்குள் பாரிய பிரச்சினைகளை உறுவாக்கும் அந் நபர்களின் நடவடிக்கைகள் தொடர்பாக முன்னறிவுடனும் அவதானத்துடனும் இருப்பதுடன் அதற்கெதிராக நடவடிக்கை மேற்கொள்வது ஒவ்வொரு இலங்கை பிரசையினதும் தலையாய கடமையகும்.

இதனடிப்படையில் இறுதியாக இம் மியன்மார் பிரசைகள் ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்பான உயர்ஸ்தானிகரின்  (UNHCR)  அனுசரனையுடன் தற்காலிகமாக இல்ங்கையில் தங்க வைக்கப் பட்டுள்ள குழுவென்பதுடன் மிகவும் குறுகிய காலத்தில் நாட்டிலிருந்து வெளியேற்றப் படுவார்கள் எனவும் குறிப்பிடுகிறேன்.

மியன்மார் அகதிகளின் உரிமைகளுக்காக
மன்றில் தோன்றிய
RRT சட்டத்தரணிகள் குழு உறுப்பினர்.

ரோஹிங்யா அகதிகள் விவகாரம் தொடர்பான முழு விளக்கம் ..  ரோஹிங்யா அகதிகள் விவகாரம் தொடர்பான முழு விளக்கம் .. Reviewed by Madawala News on 9/27/2017 11:33:00 PM Rating: 5