Ad Space avaiable

தீண்டிய குடும்பஸ்தவருடன் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட பாம்பு. 10 குட்டிகளை ஈன்று கவனத்தை ஈர்த்தது.

 
பாறுக் ஷிஹான்-

யாழ் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில்  அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தரை தீண்டிய  பிடையன் பாம்பு ஒன்று பத்து குட்டிகளை ஈன்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் 

காரைநகரில் பாம்புக் கடிக்கு இலக்காகிய குடும்பஸ்தர்  ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17)  இரவு யாழ்போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 அவரைக் கடித்ததாகக் கூறப்பட்ட பிடையன் பாம்பு ஒன்றும் போத்தலில் அடைக்கப்பட்டு  வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. போத்தலில் இடப்பட்ட குறித்த பாம்பினையும் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்துள்ளனர்.

இதே வேளை  காலை வேளை  பார்த்தபோது குறித்த பாம்பு நான்கு குட்டிகளை ஈன்றுள்ளமை தெரியவந்துள்ளது. பின்னர் அதன் பின்னர்   அப்பாம்பு மேலும் ஆறு குட்டிகளை ஈன்றுள்ளது.

 இந்நிலையில் பாம்பினையும் குட்டிகளையும் கொழும்பு பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைக்கான ஆராச்சிப் பிரிவுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

 இதேவேளை பாம்புக் கடிக்கு இலக்காகி அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தரும்  குணமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காரைநகரை சேர்ந்த சுப்பிரமணியம் சிறிரங்கன் (வயது – 36) என்பவரே பாம்புக் கடிக்கு உள்ளானார்


 
தீண்டிய குடும்பஸ்தவருடன் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட பாம்பு. 10 குட்டிகளை ஈன்று கவனத்தை ஈர்த்தது. தீண்டிய குடும்பஸ்தவருடன் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட பாம்பு. 10 குட்டிகளை ஈன்று கவனத்தை ஈர்த்தது. Reviewed by Madawala News on 9/19/2017 12:04:00 PM Rating: 5