Kidny

Kidny

வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்துக்குக் கீழ் வீழ்ந்த வேன். தூக்கி வீசப்பட்ட வர்த்தகர். புத்தளம் பிரதேசத்தில் விபத்து.

புத்தளம், பழைய மன்னார் வீதியில் இன்று (14) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர்  படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் வேன்  ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்ததாலேயே விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியின் பாலத்துக்குக் கீழாக வீழ்ந்துள்ள வான் கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்தவர் வனாதவில்லுவ பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் என ஆரம்பகட்ட விசாரணைகளிலீருந்து தெரியவந்துள்ளது.

வான் விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து சிறிது தூரத்திலிருந்து குறித்த வர்த்தகர் காயங்களுடன் மீட்கப்பட்டு பொதுமக்களின் உதவியுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்துக்குக் கீழ் வீழ்ந்த வேன். தூக்கி வீசப்பட்ட வர்த்தகர். புத்தளம் பிரதேசத்தில் விபத்து. வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்துக்குக் கீழ் வீழ்ந்த வேன். தூக்கி வீசப்பட்ட வர்த்தகர். புத்தளம் பிரதேசத்தில் விபத்து. Reviewed by Madawala News on 9/14/2017 02:50:00 PM Rating: 5