Kidny

Kidny

குரங்குகள் இனச் சேர்க்கையினை தடுக்க 143 மில்லியன் ரூபா செலவு .



கேகாலை மாவட்டத்தில்  77,470 குரங்குகள் உள்ளதாவும், இவைகளினால் வீடுகளிலே உணவுகளை வைக்க முடியாதுள்ளதாகவும் எதிர்வரும் காலங்க ளில் குரங்குகளை கட்டுப்படுத்த துப்பாக்கிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப் படுமென கேகாலை மாவட்டச் செயலாளர் சந்திரசிரி பண்டார தெரிவித்தார்.

 கேகாலை மாவட்ட விவசா யக் கமிட்டிக் கூட்டம் விவசாய பணிப்பாளர் மஞ்சுல பின்னலந்த தலைமையில் கேகாலை மாவட்ட செயலக கேட்போர் மண்டபத்தில் இடம் பெற்றது. தொடர்ந்து மாவட்டச் செய லாளர் குறிப்பிட்டதாவது,

" இந்த குரங்குகள் பெருகாமல் இருக்க இனச் சேர்க்கை தடுப்புக்கு 143 மில்லியன் ரூபா செலவாகிறது." " ஒரு நாளைக்கு ஒரு குரங்கு ஒரு மரத்தை அழித்துவிடும் போது 77,470 மரங்கள்ஒருநாளில் அழிந்து விடுகின்றன.

இவ்வாறான சூழ்நி லையிலும் கேகாலை மாவட்டத் தில் உணவுக்காக மரஞ் செடிகளை பாதுகாப்படுவது ஆச்சரியமாக உள்ளது"

"நாம் குரங்குகளை கட்டுப்ப டுத்த கடந்த காலங்களில் ரய்பல் பெற்றுக் கொடுத்தோம். எனினும் கவலைக்குறிய விடயம் என்ன வென்றால், 200 ரவைகள் மாத்தி ரமே பெற்றுள்ளனர். மிகுதி 1300 ரய்பல்களை அழகுப் பொருளாக வீட்டிலே வைத்துள்ளனர்.

" முன்னர் ரய்பல் ஒன்றை 12000/= ரூபாவுக்கு கொள்வனவு
செய்தோம். தற்பொழுது 25000/- ரூபா தேவைப்படுகிறது.

விவசாய பணிப்பாளர் ஊடாக பாதுகாப்பு அமைச்சிடம், துப்பாக்கிகள் கோரியுள்ளோம்.

பெளத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் விரும்பாமல் சரி குரங்குகளை கொன்றுவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

சில சமயம் இதற்கு மத அமைப் புகளினால் எதிர்ப்பு உருவாகலாம். எனினும் அதற்கு மேல் மனித உயிர் கள் முக்கியமாகும். ஒரு குரங்கை கொன்று விட்டால் அதுபற்றி கிராம சேவகருக்கு அறிவிக்க வேண்டும்.

குரங்கின் இறைச்சியினை விற்பனை செய்யக் கூடாது. விரும்பினால் உணவுக்கு பயன்ப டுத்தலாம்" எனக் குறிப்பிட்டார்.

குரங்குகள் இனச் சேர்க்கையினை தடுக்க 143 மில்லியன் ரூபா செலவு . குரங்குகள் இனச் சேர்க்கையினை தடுக்க 143 மில்லியன் ரூபா செலவு . Reviewed by Madawala News on 9/22/2017 10:40:00 AM Rating: 5