Kidny

Kidny

160 மில்லியன் மக்களுக்கு உணவளிக்க முடிந்த பங்களாதேஷால் ஏழு லட்சம் பேருக்கு உணவளிக்க முடியும்; ஷேக் ஹஸீனா



160 மில்லியன் மக்களுக்கு உணவளிக்க முடிந்த பங்களாதேஷால் ஏழு லட்சம் பேருக்கு உணவளிக்க முடியும் என பங்களாதேஷ பிரதமர் ஷேக் ஹஸீனா குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள மியன்மார் அகதிகளை நேரில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேற்குறிப்பிட்ட விடயத்தை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,

அநீதிகளை நாம் சகித்துக் கொள்ள மாட்டோம்,எம்மாலான அத்தனை உதவிகளையும் செய்ய நாம் தயாராக இருக்கிறோம்,ஆனால் மியன்மார் அரசு தனது நாட்டு மக்களை மீழ குடியமர்த்தும் பணியை மிக விரைவாக முன்னெடுக்க வேண்டும்.அதுவரைக்கும் உங்களை நாம் கைவிட மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

மியன்மார் அரசு உங்களை மீழ குடியமர்த்த வேண்டுமென்று பிரதமர் ஹஸீனா கூறியதும் ரோஹிங்யா மக்கள் கதறியழுமை குறிப்பிடத்தக்கது.

160 மில்லியன் மக்களுக்கு உணவளிக்க முடிந்த பங்களாதேஷால் ஏழு லட்சம் பேருக்கு உணவளிக்க முடியும்; ஷேக் ஹஸீனா 160 மில்லியன் மக்களுக்கு உணவளிக்க  முடிந்த பங்களாதேஷால் ஏழு லட்சம்  பேருக்கு உணவளிக்க முடியும்; ஷேக் ஹஸீனா  Reviewed by Madawala News on 9/15/2017 02:33:00 AM Rating: 5