Kidny

Kidny

டிசம்பர் 9 ம் திகதி மூண்று மாகாண சபைகளுக்கான தேர்தல் ?


அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கூறப்படும் 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு சர்வசன வாக்கெடுப்பு நடாத்தத் வேண்டும் என  நீதிமன்றம் வியாக்கியானம் கூறுமாயின் எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி மாகாண சபைத் தேர்தலை நடாத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச் மூலத்துக்கு சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமா? அல்லது பாராளுமன்றத்திலுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் அதனை நிறைவேற்ற முடியுமா என்பது தொடர்பிலான நீதிமன்ற வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த வியாக்கியானத்தில் பொது மக்கள் கருத்துக் கணிப்பு நடத்த தேவையில்லையென கூறப்படுமாயின் எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி வேட்புமனுக் கோரி கட்டாயமாக தேர்தல் நடாத்துவதற்கு ஒரு தினத்தை அறிவிக்கப்பட வேண்டியுள்ளது எனவும் ஆணைக்குழுவின் தலைவர் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கையில் கூறியுள்ளார்.

டிசம்பர் 9 ம் திகதி மூண்று மாகாண சபைகளுக்கான தேர்தல் ?  டிசம்பர் 9 ம் திகதி மூண்று மாகாண சபைகளுக்கான தேர்தல் ? Reviewed by Madawala News on 9/17/2017 12:13:00 AM Rating: 5