tg travels

மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு 20 கோடி ருபா பெட் ஸ்கேனர் மெசினை பெற போராடி வெற்றி கண்ட மகன் ஹூமைட் வபாத்தானார்.

 
-அஷ்ரப் ஏ சமத்-

என்.எம் ட்ரவல்ஸ் முஹம்மத் ஹாஜியாரின் மகன் ஹூமைட் இன்று காலமானார்.

20 கோடி ருபா பெட் ஸ்கேனர் மெசினை  மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு  பெற்றுக் கொடுக்க இவர் தனது தந்தையின் ஊடாக திட்டமொன்றை வகுத்து அதில் வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது..

 கதிஜா பவுண்டேசன் ஊடாக இத் திட்டத்திற்காக முஹம்மத் மிகவும் போராடி வெற்றிகண்டார். 

அதுபற்றிய விழிப்புணர்வு பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டவருமான மொஹமட் ஹாஜியாரின் மகன் ஹுமைட் இன்று 11.09.2017 வபாத்தாகியுள்ளார்.

 மிக இளம் வயதில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்

இவரது ஜனாசா இன்று(12) 04.30 மணிக்கு தெஹிவளை ஜூம்ஆப் பள்ளி வாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.

 ஜனாசா 46 c களுபோவில வைத்தியசாலை வீதி தெஹிவளையில் வைக்கப்பட்டுள்ளது.

NB: குறிப்பிட்ட பெட் ஸ்கேனர் இயந்திரத்துக்கான பணம் சேகரிக்கப்பட்டு சுகாதார அமைச்சால் ஜெர்மன் நிறுவனம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில் மகரகம வைத்தியசாலையில் அதற்கான கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வருவதால் இதுவரை இங்கு  கொண்டு வரப்பட்டு பொறுத்தப்படவில்லை.

Janaza/Funeral Today 12 th Sep 4.30 pm .. Home 46C Hospital Rd Dehiwala to Muhiyadeen Grand Jumma Mosque Burial Ground 
மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு 20 கோடி ருபா பெட் ஸ்கேனர் மெசினை பெற போராடி வெற்றி கண்ட மகன் ஹூமைட் வபாத்தானார். மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு  20 கோடி ருபா பெட் ஸ்கேனர் மெசினை பெற போராடி வெற்றி கண்ட மகன் ஹூமைட் வபாத்தானார். Reviewed by Madawala News on 9/12/2017 07:11:00 AM Rating: 5