Ad Space Available here

அமெரிக்காவில் ஆயிரம் ஆண்டில் இல்லாத புயல் ரூ.20 லட்சம் கோடி இழப்பு

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தாக்கிய புயலால், இதுவரை இல்லாத வகையில், 20 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது; 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில், 'ஹார்வி' புயல் சமீபத்தில், கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு, 215 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன், 127 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது.

இதனால், பல லட்சம் பேர், மின் இணைப்பு, குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டனர்; ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். புயல், மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து அமெரிக்க பத்திரிகையான, 'நியூயார்க் டைம்ஸ்' கூறியுள்ளதாவது: அமெரிக்க வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில், மிக மோசமான பாதிப்புகளை, ஹார்வி புயல் ஏற்படுத்தியுள்ளது; பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயல் காரணமாக, 38 பேர் உயிரிழந்துள்ளனர்; 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். வீடுகள் சேதமடைந்ததால், 32 ஆயிரம் பேர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகளால், 30 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பல நாள் பாதிப்புக்கு பின், நிலைமை சற்று சீரடைந்து வருகிறது. எனினும், பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீண்டு, இயல்பு வாழ்க்கை திரும்ப, பல நாட்கள் ஆகலாம்.இவ்வாறு அந்த பத்திரிகை கூறியுள்ளது.


அமெரிக்காவில் ஆயிரம் ஆண்டில் இல்லாத புயல் ரூ.20 லட்சம் கோடி இழப்பு அமெரிக்காவில் ஆயிரம் ஆண்டில் இல்லாத புயல் ரூ.20 லட்சம் கோடி இழப்பு Reviewed by Madawala News on 9/01/2017 08:58:00 PM Rating: 5