Kidny

Kidny

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தத்திலிருந்து இளைஞர் யுவதிகளுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை நீக்கியது தொடர்பில் அதிருப்தி ..



2012 ம் ஆண்டு 22ம் இலக்க உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தத்திலிருந்து இளைஞர் யுவதிகளுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை நீக்கியது சம்பந்தமாக.

இலங்கை நாட்டின் அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பு அளப்பெறியது. ஜனநாயகத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் இளைஞர்கள் இன்றியமையாதவர்கள். உலகளாவிய ரீதியில் இளைஞர்களின் செயற்பாடுகளுக்கான கேள்வி அதிகம் காணப்படுகின்ற இக் கால கட்டத்தில் அபிவிருத்தி அடைந்து வரும் இலங்கை போன்ற எமது நாட்டின் அரசியலிலும் தேர்தல்களிலும் இளைஞர்களினது பிரதிநிதித்துவத்தை நீக்குவது கவலைக்கிடமான விடயமாகும். 

1990ம் ஆண்டிலிருந்து அறிமுகம் செய்யப்பட்டு அதனை தொடர்ந்த 1997, 2002,2011 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் இளைஞர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த வாய்ப்புகள் கடந்த 2017 ஓகஸ்ட் 26ம் திகதி இலங்கை தேசிய பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தேர்தல் திருத்தச் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டதையிட்டு இளைஞர் பாராளுமன்றம் சார்பாக எமது கடுமையான எதிர்ப்பினை தெறிவிக்கின்றோம். கிராம மட்டங்களில் இருந்து எதிர்காலத்தில் அரசியல் விற்பன்னர்களாக உருவாகப் போகும் இளைஞர் யுவதிகளுக்கு இத் தேர்தல் திருத்தம் மிகப் பெரும் முட்டுக் கட்டாக அமையும் என்பதில் கீச்சிற்றும் ஐயமில்லை. 

இளைஞர் யுவதிகளின் அரசியல் பிரவேசம் போதாமை காரணமாக ஒரு வகையான பிற்போக்கான, பழமை வாத அரசியலே இன்றைய இலங்கையில் காணப்படுகின்றது.

இளைஞர்கள் இந்த நாட்டின் முதுகெழும்பாக திகழ்பவர்கள் எனவே அனைத்து அரசியல் நகர்வுகளிலும் அவர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதுவே அதிகமான அரசியல் துறை சார்ந்தவர்களின் அபிப்பிராயமாக காணப்படுகின்ற இச்சந்தர்ப்பத்தில் இதுபோன்றதொரு அரசியல் திருத்தம் ஒரு போதும் எம்மால் ஜீரணிக்க முடியாத ஒரு விடயம்.

கடந்த நான்காவது இளைஞர் பாராளுமன்ற அமர்விற்கு விஷேட அதீதியாக கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக் குழுத் தலைவர் தனது உரையில் குறிப்பிடுகையில்

" எதிர்காலத்தில் இளைஞர்கள் யுவதிகள் என பால் வேறுபாடின்றி அனைவரும் எம் நாட்டு அரசியல் வளர்ச்சிக்கு முன்வர வேண்டும் எனவும் அவர்களுக்கான வாய்ப்புக்களை அனைத்து கட்சி தலைவர்களும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்."

இலங்கை அரசியலில் பழுத்த அனுபவமுடைய ஒருவரின் இவ்வகையான வார்த்தைகள் எமது நிலைப்பாட்டிற்கு மிகவும் வழு சேர்கக்கூடியதாக அமைகின்றன.

இளைஞர் யுவதிகளுக்கு இத்தேர்தல் சட்டத்தின் மூலம் ஏற்படும் அநீதிக்கு எதிராக இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் மூலம் செய்ய முடியுமான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்க இருக்கின்றோம்.

எதிர்வரும் சில தினங்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து இத் தேர்தல் திறுத்த சட்டத்திற்கு எதிராக இளைஞர் பாராளுமன்றம் சார்பாக மகஜர் ஒன்றையும் கையளிக்க இருக்கின்றோம். அதே போல் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களை சந்தித்து இது சம்பந்தமாக கலந்துரையாடவுமுள்ளோம்.

என்றும் எமது நாட்டின் அரசியல் களத்தில் இளைஞர் யுவதிகளை உள்ளடக்கிய புதியதொரு அரசியல் பயணத்தை தொடர இளைஞர் பாராளுமன்றத்தின் உறுப்பினர் என்ற வகையில் இச் செயற்பாடுகளை முன்னெடுப்பது எமது தலையாய கடமையாகும்.

நுஸ்லி ஸுலைம்
களுத்துறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தத்திலிருந்து இளைஞர் யுவதிகளுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை நீக்கியது தொடர்பில் அதிருப்தி ..  உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தத்திலிருந்து இளைஞர் யுவதிகளுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை நீக்கியது தொடர்பில் அதிருப்தி .. Reviewed by Madawala News on 9/12/2017 10:40:00 PM Rating: 5