Kidny

Kidny

மே - ஜூலை காலாண்டில் ஒரே ஒரு தடவை பாராளுமன்றம் சென்ற தொண்டமான் !




2017  ம் வருடம் மே மாதம் முதல் ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் ஒரே ஒரு அமர்வில் மாத்திரம் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2017  ம் வருடம் மே மாதம் முதல் ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் 22 பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றுள்ள அதேவேளை இதில் ஆறுமுகன் தொண்டமான் ஒரே ஒரு அமர்வில் மாத்திரம் கலந்துகொண்டுள்ளர்.

மொஹான் லால் கிரோரு மற்றும் பிரேம்லால் ஜயசேகர ஆகியோர் இரண்டு அமைர்வுகளிலும் , மஹிந்த ராஜபக்‌ஷ , பழனி திகாம்பரம் , மொஹான் டி சில்வா , துமிந்த திஸாநாசயக்க , அருந்திய பெர்ணாண்டோ உள்ளிட்டோர் நான்கு அமர்வுகளிலும்,

சதுர சேனாரத்ன,பாலித தேவரப்பெரும, ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ, கீதா குமாரசிங்க , எஸ் வியாழேந்திரன் , எஸ் சிவமோகன் உள்ளிட்டோர் ஐந்து அமர்களிலும் கலந்து கொண்டுள்ளனர்.

22 அமர்வுகளில் 21 அமர்வுகளில் லக்‌ஷமன் கிரியல்ல, தினேஸ் மற்றும் பந்துல சகோதர்கள், கரு ஜயசூர்ய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளர்.

குறித்த காலாண்டில் இடம்பெற்ற 22 அமர்வுகளில் பிரதியமைச்சர் ஹரீஸ் 5 அமர்வுகளில் கலந்துகொண்டுள்ளமை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில்
ஆகக் குறைந்த எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.
மே - ஜூலை காலாண்டில் ஒரே ஒரு தடவை பாராளுமன்றம் சென்ற தொண்டமான் !  மே - ஜூலை காலாண்டில் ஒரே ஒரு தடவை பாராளுமன்றம் சென்ற தொண்டமான் ! Reviewed by Madawala News on 9/09/2017 07:53:00 PM Rating: 5