Ad Space avaiable

2017ம் ஆண்டு பட்டதாரி ஆசிரிய நியமனங்களில் திட்டமிட்டு புறக்கணிக்கப் படும் ஊவா முஸ்லிம் பாடசாலைகள்.


ஏற்கனவே பாரிய பின்னடைவுகளுக்கு உள்ளாகியுள்ள ஊவா முஸ்லிம் பாடசாலைகள், தமது கல்வி முன்னேற்றத்திற்காக தொண்டர்
ஆசிரியர்களையும் , தொண்டு நிருவனங்களின் தயவிலும் பல சிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வருகின்றன.

அரசியல் பிரதிநித்துவம் இல்லாத அடிப்படை காரணத்தால் தட்டிகேட்க ஆளில்லாத நாதியற்ற சமூகமாக தொடர்ந்தும் பல அநீதிகளுக்கும் ஓரவஞ்சனைகளுக்கும் முகம் கொடுத்து நிற்கின்றது  ஊவா முஸ்லிம் கல்வி. கடந்த காலங்களில் முகங்கொடுக்க நேர்ந்த பல அநீதிகளுக்கு நீதிமன்ற படிகளை ஏறி நடந்து நியாயம் பெற்ற ஊவா முஸ்லிம் சமூகம் கல்வித்துறையில் இன்னுமொரு அநீதியை முகங்கொடுத்து நிற்கின்றது.

  2017ம் ஆண்டு பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய பற்றாக்குரைகளுக்கமைய வழங்கப் படவுள்ள சுமார் 65 தமிழ் மொழி மூல பட்டதாரி ஆசிரிய நியமனங்களில் முஸ்லிம் பாடசாலைகள் முற்றாக புறக்கணிக்கப் பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. மாகாண கல்வி திணைக்களத்தின் தமிழ் பிரிவினூடாக சேகரிக்கப் பட்ட தகவல்களுக்கமைவே இந்த நியமனங்கள் வழங்கப் படவுள்ளதாக மாகாண கல்வியமைச்சின் செயலாளர் திருமதி அம்பன்வல அவர்களால் உறுதியளிக்கப் பட்டிருந்தது. அதுமாத்திரமன்றி ஏற்கனவே தமது பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய பற்றாக்குறைகள் பற்றி எழுத்துமூலம் மாகாண கல்விச் செயலாளருக்கு அறிவிக்கப் பட்ட கடிதத்திற்கு பதில் கடிதம் மூலாம் உறுதியளித்துள்ள மாகாண கல்விச் செயலாளர் குறிப்பிட்ட பாடசாலைகளின் பட்டதாரி ஆசிரிய தேவைகள் முன்னுரிமை பட்டியலில் உரிய பாடசாலைகள்  உள்வாங்கப் பட்டுள்ளதாகவும்  அறிவிக்கப் பட்டுள்ளது.


     ஆனால் குறித்த தமிழ் மொழிமூல ஆசிரிய நியமனங்களுக்கான பொறுப்பை ஊவா மாகாண முதலமைச்சர் திரு சாமர சம்பத் தசநாயக அவர்களால் மாகாண அமைச்சர்  செந்தில் தொண்டமான் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டு 2017/09/27 ந் திகதி ஜனாதிபதியின் பதுளைவருகையின் போது அவர்கைகளால் குறித்த நியமனங்கள் வழங்கப் பட ஏற்பாடாகியுள்ளது என்று அறிய முடிகின்றது.

இந்த நியமனங்கள் விடயமாக ப/ பாத்திமா முஸ்லிம் கல்லூரி , ப/ அல் அதான் ம வி , ப/ ராசிக் பரீத் ம வி பாடாசாலை அபி சங்க உறுப்பினர்கள் அமைச்சர் செந்தில் தொண்டமான் அல்லது    மாகாண கல்வி திணைக்களத்தின் தமிழ் பிரிவு பொறுப்பாளர் திருமதி கலையரசி அவர்கள் மற்றும் பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ள பாரிய முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்கள் . ஆனால் இதுவரை  தொடர்புகொள்ள முடியாதுள்ளது.


இந்த நல்லாட்சியை உருவாக்க ஊவா முஸ்லிம்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். கடந்த ஊவா  மாகாண சபை தேர்தலின் போது  அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அவர்களின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது பதுளை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகளே. அந்த வெற்றியின் உந்துதலூடாகத்தான் அடுத்துவந்த ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தாளம் போடப் பட்டது. 


      அத்துடன் வந்த நூறுநாள் வேலைத்திட்டத்திலும் எழு தமிழ் மொழிமூல பாடசாலைகள் விஷேட திட்டமொன்றின் கீழ் அபிவிருத்தி திட்டத்திற்காக உள்வாங்கப் பட்டது. அதிலும் எந்தவொரு முஸ்லிம் பாடசாலையும் ஊவாவில் உள்வாங்கப் படவில்லை. அதைத் தொடர்ந்து வந்த அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்திலும் ஊவா முஸ்லிம் பாடசாலைகள் பெருவாரியாக புறக்கணிக்கப் பட்டன. அதைத் தொடர்ந்து இந்த நியமனங்களிலும் ஊவா முஸ்லிம் பாடசாலைகள் புறக்கணிக்கப் பட்டால் எமது பிள்ளைகள் எங்கு சென்று கல்வி கற்பார்கள் என்று பதுளை மாவட்ட முஸ்லிம் கல்வி சமூகத்தால் கேள்வி எழுப்பப் படுகின்றது. 

   எமது சமூகத்தின் முதுசங்களாக திகழும் பதுளை ப/ அல் அதான் ம வி , பண்டாரவெல ப/ சர் ராசிக் பரீட் ம வி , வெளிமட முஸ்லிம் மவி , ப/ குருதலாவ முஸ்லிம் மத்திய கல்லூரி உள்ளடங்கலான ஊவா முஸ்லிம்  பாடசாலைகளின் உயர்தர பிரிவுகள் பல சிரமங்களுக்கு மத்தியில் தொண்டர் ஆசிரியர்களைக் கொண்டும் , தொண்டு நிறுவனங்களின் உதவிகளைக் கொண்டும் இயங்கிவருகின்றன. இந்த நிலையில் இவ்வாறான ஓரவஞ்சனைகளுக்கும் முகங்கொடுக்க நேர்ந்தால் ஊவா முஸ்லிம்களின் எதிர்கால கல்வி மேம்பாட்டிற்கான எந்தவித உத்தரவாதமுமில்லை என்பது கண்கூடாக தெரிகின்றது என்று கல்வி ஆர்வலர்கள் கருத்துக் கூறுகின்றார்கள்.

      மாணவர்களின் கல்வியில் நாம் இனவாதத்தை  புகுத்துவது அடிப்படை உரிமை மீறலாகும். கல்விக்கான சமவாய்ப்பு எல்லா சமூகங்களுக்கும் வழங்கப் படவேண்டும். ஊவா தமிழ் மொழி கல்வியை  நிறுவன ரீதியிலாக வேறுபிரித்த எல்லா தருணத்திலும் இவ்வாறான வேற்றுமைகளுக்கு ஊவா முஸ்லிம் பாடசாலைகள் உள்ளாக்கப் பட்டுள்ளன. 


ஆகவே குறித்த நியமனங்களில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு மீண்டும் அநீதியிளைக்கப் படுமானால் ஊவா மாகாண கல்வியமைச்சை மாகாண முதலமைச்சரின் பொறுப்பில் வைக்குமாறும் தமிழ் கல்வியமைச்சு சிங்கள கல்வியமைச்சு என்று வேறுபிரித்து செயற்படுத்தாமல் பொதுவானதொரு கல்வியமைச்சுமூலம் அனைத்து சமூகங்களுக்கும் சம வாய்ப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டி ஜே வி பி போன்ற இதர அரசியல் சக்திகளுடன் ஒன்றிணைந்து செயற்பட மலையக முஸ்லிம் கவுன்சில் (ucmc)  நடவடிக்கை எடுத்து வருகின்றது. . 
2017ம் ஆண்டு பட்டதாரி ஆசிரிய நியமனங்களில் திட்டமிட்டு புறக்கணிக்கப் படும் ஊவா முஸ்லிம் பாடசாலைகள். 2017ம் ஆண்டு  பட்டதாரி ஆசிரிய நியமனங்களில் திட்டமிட்டு புறக்கணிக்கப் படும் ஊவா முஸ்லிம் பாடசாலைகள். Reviewed by Madawala News on 9/27/2017 07:07:00 PM Rating: 5