Kidny

Kidny

உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2018 ஜனவரி 7 அல்லது 20 அல்லது 27 ம் திகதி நடத்தப்படும் ..



“உள்ளூராட்சி மன்றத் தேர்தல், இவ்வருடம் நடைபெறாவிட்டாலும், நிச்சயமாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறும்” என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இதற்கமைய, ஜனவரி 06, 20 மற்றும் 21ஆம் திகதிகளில் தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், “எம்மால் முடிந்த அளவுக்கு தேர்தலை வெகுவிரைவில் நடத்த முயற்சித்து வருகின்றோம். இருப்பினும், பிரதான கட்சிகளில் வேட்பாளர்களை தெரிவு செய்ய சந்தர்ப்பம் வழங்க வேண்டியுள்ளது. அதில் பெண்கள் பிரிதிநிதித்துவத்தை 25 சதவீதமாக நிச்சயம் அதிகரிக்கப்படும். அவ்வாறு பெண்களின் பிரதிநிதித்துவத்துக்கு வாய்ப்பளிக்காத கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்கள் நிராக்கரிக்கப்படும்” எனவும் குறிப்பிட்டார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (12) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2018 ஜனவரி 7 அல்லது 20 அல்லது 27 ம் திகதி நடத்தப்படும் .. உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2018 ஜனவரி 7 அல்லது 20 அல்லது 27 ம் திகதி நடத்தப்படும் .. Reviewed by Madawala News on 9/12/2017 07:33:00 PM Rating: 5