Kidny

Kidny

2018 மார்ச் மாதத்திற்கு முன்னர் தேர்தலாம் ..


பதவிக்காலம் முடிவடையும் மூன்று மாகாண சபைகளுக்கும், உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தல்களை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நடத்துவது அரசாங்கத்தின் நோக்கமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


மாகாண சபைத்தேர்தல்கள் திருத்த சட்டமூலம் பிரேரணை மீதான விவாதத்தில் பிரதமர் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில். பிரேரணைகளின் போர்வைக்குள் மறைந்து கொண்டு தேர்தல்களை பின்போடும் எதுவித தேவையும் கிடையாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க  மேலும் கூறினார். 

மேலும் மன்றிக் உரையாற்றிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா சமகால தேர்தல் முறை மாற வேண்டுமென்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு.மாகாண சபைத் தேர்தல்களுக்காக கலப்பு தேர்தல் முறை ஏற்படுத்தப்படும்.எல்லாத் தேர்தல்களையும் ஒரே முறையின் கீழ் நடத்துவது இதன் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.

2018 மார்ச் மாதத்திற்கு முன்னர் தேர்தலாம் .. 2018 மார்ச் மாதத்திற்கு முன்னர் தேர்தலாம் .. Reviewed by Madawala News on 9/21/2017 01:38:00 AM Rating: 5