tg travels

சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்வதா ? ஜனதிபதியுடன் பிரதமர் தீவிர ஆலோசனை ..


20 ம் திருத்த சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது தொடர்பில்  பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடயே நேற்று வெள்ளி இரவு தீவிர ஆலோசனை நடந்துள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

20ம்திருத்த சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதன் மூலம் மக்கள் ஆணையை பெறாமல் 20 ஐ நிறைவேற்ற முடியாது என்ற தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


எதிர்வரும் 19 திகதி உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியிடப்பட உள்ள நிலையில் 20 திகதி சபாநாயகர் இதனை பாராளுமன்றத்திற்கு அறிவிப்பார் என தெரிவிக்கப்படுகிறது..

சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்வதா ? ஜனதிபதியுடன் பிரதமர் தீவிர ஆலோசனை ..  சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்வதா ? ஜனதிபதியுடன் பிரதமர் தீவிர ஆலோசனை .. Reviewed by Madawala News on 9/16/2017 12:51:00 PM Rating: 5