Kidny

Kidny

FLASH NEWS ! கிழக்கு மாகாண சபை 20வது திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவு.

20வது திருத்த சட்டமூலம் இன்று கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

20வது திருத்த சட்டமூலம் இன்று (2017.09.11) கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கவிருந்த நிலையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் ( முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் கூட்டமைப்பு) யாரும் சபை அமர்வுக்கு சமூகமளிக்கவில்லை.

அதனை தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடிய போது ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை அதனை தொடர்ந்து மீண்டும் 1 மணிக்கு கூடிய சபையில் 20வது திருத்த சட்டமூலம் தொடர்பில் வாக்களிப்பு ஆரம்பமானது.

குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 25 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் கூட்டமைப்பு   இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

குறிப்பிட்ட சட்டமூலம் பெரும்பான்மை பிரதேச மாகாண சபைகளில் படு தோல்வியை சந்தித்து வருவது   குறிப்பிடத்தக்கது.
FLASH NEWS ! கிழக்கு மாகாண சபை 20வது திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவு. FLASH NEWS ! கிழக்கு மாகாண சபை 20வது திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவு. Reviewed by Madawala News on 9/11/2017 02:21:00 PM Rating: 5