Kidny

Kidny

20ஆவது திருத்தம் குறித்து இன்று தீர்மானிப்போம்



அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவை வழங்குவதா, இல்லையா என்பது குறித்து, கிழக்கு மாகாண சபையில், இன்று (07) இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் ​தெரிவித்தார்.


இந்த விவகாரம் தொடர்பில், அவர் கருத்து தெரிவிக்கையில், “கிழக்கு மாகாண சபையின் முடிவை, சகல மாகாணங்களும் எதிர்பார்த்துள்ளன. அதேபோல, எமது மாகாண மக்களும் எதிர்பார்த்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.  

அரசமைப்பின் விவகாரம் தொடர்பில், கடந்த 28 ஆம் திகதி நடைபெற்ற மாகாண சபை அமர்வின்போது, ஏற்பட்ட அமளியால், சபையின் நடவடிக்கைகளை தவிசாளர் சந்திரதாச கலப்பதி, செப்டெம்பர் 7ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   

20ஆவது திருத்தம் குறித்து இன்று தீர்மானிப்போம் 20ஆவது திருத்தம் குறித்து இன்று தீர்மானிப்போம் Reviewed by Madawala News on 9/07/2017 07:56:00 AM Rating: 5