Kidny

Kidny

உள்ளுராட்சிமன்ற தேர்தல் 2018 ஜனவரி 20 ம் திகதியில் நடத்தப்படும் ..




தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வரப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி 20 ம் திகதி இடம்பெறும் என அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவர் மடவளை நியுஸுக்கு குறிப்பிட்டார்.

தொடர்ச்சியாக தேர்தல் பிற்போடப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் வினவிய போதே குறித்த முக்கியஸ்தர் மேற்குறிப்பிட்ட விடயத்தை குறிப்பிட்டார்.


டிசம்பர் மாதம் க பொ த சா தரப் பரீட்சை இடம்பெற உள்ளதால் ஜனவரி 20 ம் திகதி தேர்தல் இடம்பெறும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
உள்ளுராட்சிமன்ற தேர்தல் 2018 ஜனவரி 20 ம் திகதியில் நடத்தப்படும் ..  உள்ளுராட்சிமன்ற தேர்தல் 2018 ஜனவரி 20 ம் திகதியில் நடத்தப்படும் .. Reviewed by Madawala News on 9/08/2017 04:33:00 PM Rating: 5