Ad Space Available here

மலேசியாவில் 21 மாணவர்களை பலிகொண்ட தீவிபத்து. கைதானவர்கள் தெரிவிக்கும் காரணம்.-ஹஸன் இக்பால்-

கடந்த வாரம் 21 சிறுவர்களின் உயிரைக் குடித்த மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள மத்ரசா பாடசாலையில் அதிகாலை இடம்பெற்ற தீவிபத்து திட்டமிட்ட வன்செயல்' என மலேஷிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் மின் ஒழுக்கு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக சொல்லப்பட்டாலும் பின்னர் விசா ரணைகளில் இது மத்ரசாவுக்கு வெளியே உள்ள சிறுவர் குழுவினால் வஞ்சம் தீர்க்கப்பட்ட நிகழ்வென்று தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் 11 தொடக்கம் 18 வயதுக்குட்பட்ட ஏழு சிறுவர்களை மலேஷிய பொலிசார் கைது செய்துள்ளனர்.இவர்கள் அனைவரும் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்டவர்கள் என பெரும்பாலாளோர் வாகனத்திருட்டு மற்றும் சமூகவிரோத செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எழுவர் கொண்ட இக்குழுவுக்கும் மத்ரசா மாணவர்களுக்குமிடையில் இருந்து வந்துள்ள நீண்டகால கசப்புணர்வுகளே இந்த வன்செய லுக்கு அடிநாதமாக அமைந்துள்ளன என விசார ணைகளில் தெரிவந்துள்ளது மத்ரசா மாணவர்களில் சிலர் தம்மை பட்டப் பெயர் சூட்டி அழைத்து தொடர்ந்து கேலி செய்து வந்ததாகவும் இதனால் எரிச்சலுற்ற சிறுவர்கள் அதற்கு வஞ்சம் தீர்க்கும் வகையிலே அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த விடுதி அறையை பற்ற வைத்ததாக  கைது செய்யபட்ட  சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்


விடுதியினுள் நுழைந்து மாணவர்களின் கைத்தொலைபேசிகளை திருடுவதாகவே திட்டம் போடப்பட்டுள்ளது.

பின்னர் சிறுவன் ஒருவனின் யோசனைப் படி நெருப்பு வைக்கும் யோசனை முன்வைக்கபட்டது. இதற்காக குறித்த தினம் மத்ரசா வளாகம் அருகில் அதிகாலை 4.30 மணிக்கு பெற்றோல் கொள்கலன் மற்றும் சமையல் எரிவாயு கொள்கலனுடன் அக்குழு திருட்டுத்தனமாக பாடசாலை யினுள் நுழைந்து மூன்றாம் மாடிக்கு சென்று நெருப்புவைத்தது
விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

தீவிபத்து நடந்த அன்றிரவு சந்தேகத்துக்கிடமான வகையில் மத்ரசா அருகே நடமாடித் திரிந்த சிறுவர் குழு ஒன்று சிசிடிவி கெமராவில் பதிவாகியதைத் தொடர்ந்தே பொலிசார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.


மாடிக்கு கொண்டுசெல்லப்பட்டு, பற்றவைக் கப்பட்டு செயற்கையாக தீவிபத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கைதுசெய்யப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் தெரிவிக்கின்றன.

மூன்று மாடிகளைக் கொண்டதாருல் குர்ஆன் இத்திபாக்கியாஹ்" எனும் இந்த மத்ரஸாவில் மூன்றாம் மாடியில் மாணவர்கள் உறங்கும் விடுதியில் தீ பரவ ஆரம்பித்துள்ளது. எனினும், இந்த மாடியில் இருந்து வெளியேறுவதற்கான ஒரே ஒரு வாயிலும் அடைக்கப்பட்டு இருந்தமையால் அனர்த்தம் மிகைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இரும்பு யன்னல் கம்பிகளைப் பற்றிப் பிடித்தவாறு, தீப்பற்றி எரியும் விடுதிக்குள் சிக்குண்ட மாணவர்கள்
உதவிக்கு வருமாறு கூக்குரலிட்டு கதறிய அழு குரல்கள் இன்னும் காதுகளில் ஒலிப்பதாக நேரில் கண்ட அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

 "தீப்பற்றி எரியும் மூன்றாம் மாடியில் அமைந் துள்ள விடுதிக்குள் வெளியேற முடியாதவாறு மாட்டிக் கொண்ட மாணவர்கள் யன்னல் கம்பி களை உடைத்து வெளியேறும் பொருட்டு கம்பி களை கால்களால் எட்டி உதைப்பதையும் பிஞ்சுக்கைகளை ஆட்டி உதவிக்கு எம்மை அழைப்பதையும்
கண்டேன்.

நானும் எனது அயலவர்களும் ஓடிச்சென்று அவர்களை மீட்க முயன்றோம். எனினும் எங்களால் அடைய முடியவில்லை. அதற்குள் எல்லாம் நடந்தாகி விட்டது." என மத்ரசா அருகே வசிக்கும் ஷாஹிர்மான் ஷஹ்ரில் தான் நேரில் கண்ட காட்சி களை விவரிக்கின்றார் "

நாம் வந்து சேர்ந்தபோது கட்டிடத்தின் 90 வீத மான பகுதிகள் பற்றி எரிந்துகொண்டிருந்தன உள்ளிருந்து மாணவர்கள் கதறும் மரண ஒலங்களை கேட்க முடியுமாக இருந்தது. கீழ் மாடியில் இருந்து ஐந்து சிறுவர்களை காப்பாற்ற முடியுமாக இருந்தது உண்மையில் அது மிக கொடூரமான அனுபவம்" என தீயணைப்பு மீட்புக் குழுவின் ஊழியர் ஒருவர் தெரிவிக்கின்றார். "ஒன்றன் மீது ஒன்று அடுக்கப்பட்ட வகையில் எரிந்து கருகிய உடல்களையே மீட்க முடியுமாக இருந்தது. இரும்பு யன்னல் கம்பிகளை உடைத்து வெளியேற சிறுவர்களால் முடியவில்லை

துரித வெளியேற்ற படிகளின் வாயிலை அடைத்த வாறு தடுப்பு சுவர் கட்டப்பட்டிருந்தது. மத்ரஸா கட்டிடத்தில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதி என்று நினைக்கிறேன் என தீயணைப்பு மீட்புக்குழு அதிகாரி ஜாஹித் தெரிவிக்கின்றார்

கருகிய உடல்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் அடையாளம் காணப்பட்டு வருவதாக கோலாலம்பூர் பொது வைத்தியசாலை வைத்திய அதிகாரி சுப்பிரமனியம் தெரிவிக்கின்றார்

மாணவர்களின் கொடூர மரணம் எல்லோர் மனதையும் உலுக்கியுள்ள அதேநேரம் மஷாவனி எனும் 29 வயது நிரம்பிய இளம் விதவைக்கு இது மும்மடங்கு பேரிழப்பாகும். மரத்தி லிருந்து விழுந்தவரை மாடேறி மிதித்தாற்போல 8 வருடங்களுக்கு முன்னர் கணவரை இழந்த மஷா வணி இக்கோரச் சம்பவத்தில் ஷயாபித் ஹைகல் (வயது 13), ஹாபிஸ் இஸ்கந்தர் (வயது 11).ஹாரிஸ் இஹ்வான் (வயது 10 ஆகிய தனது 3 மகன்களையும் இழந்து நிர்க்கதியாகியுள்ளார்.

 கணவரின் இறப்புக்கு பின்னர் மறுமணம் செய்துகொள்ளாது உறவினர்களின் தயவுடன் மூன்று மகன்களையும் முறையாக வளர்ப்பதிலேயே கண் ணுங்கருத்துமாக இருந்துவந்துள்ள மஷாவனிக்கு மகன்களின் அகால மரணச் செய்தி பேரதிர்ச்சியாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை
 இது தொடர்பில் அப்பெண்மணியின் சகோதரி ரொஸ்னானி நூர் கூறும்போது "எட்டு வருடங்க ளுக்கு முன்னரே கணவனை இழந்து விட்டார் தற்போது தனக்கென வாழ்வின் அர்த்தமாய் இருந்த மூன்று மகன்களையும் ஒரேயடியாய் இழந்து தவிக்கும் என் சகோதரிக்கு எப்படி ஆறுதல் கூறு வதென்றே தெரியவில்லை. தன் பிள்ளைகளின் கருகிய உடல்களை கண்ணால் பார்ப்பதற்கு என் சகோதரிக்கு சக்தியில்லை. நான்தான் உடல்களை அடையாளம் காண்பித்தேன்.

ஒட்டுமொத்தமாய் இடிந்து போயுள்ளோம். இச்சோதனைக் கட்டத்தை கடந்துதான் ஆக வேண்டும்." என்கிறார் மஷாவணியின் மற்றுமோர் உறவினர் அலிஸா இது தொடர்பில் விவரிக்கும்போது "மஷாவனியின் கணவரின் இறப்புக்கு பின்னர் நாம்தான் மூன்று மகன்க ளையும் பராமரித்து வந்தோம்சம்பவத்திற்கு முதல் நாள் எனது தாயுடன் ஹாபிஸ் இஸ்கந்தர் தொலையேசியில் தொடர்புகொண்டிருந்தான்.

எங்களுடன் விடு முறையைக் கழிக்க விரும்புவதாகவும், தன்னையும் சகோதரர்களையும் விடுமுறைக்கு வீடு அழைத்துச் செல்லுமாறு வேண்டியிருந்தான். எங்களுடன் விடு முறையை கழிக்கவென நாம் சனிக்கிழமை அவர் களை அழைத்துச் செல்ல வருவதாக கூறினோம் மிகவும் சந்தோஷப்பட்டான். இதற்கிடையில் இக்கோரச் சம்பவம் நடைபெறும் என கனவிலு நினைத்துப் பார்க்கவில்லை."

ரொட்டித் துண்டை ஊட்டி விட்டேன்; அமீன் அஷ்ரபின் தாயின் கண்ணீர்க் கதை சம்பவம் நடைபெற்ற தினத்துக்கு முதல் நாள் தாருல் குர்ஆன் இத்தியாகியாஹ் மத்ரசா பாடசா லையில் பயின்று வந்த தனது மகன் அமீன் அஷ்ரபை (வயது 11) சந்தித்து உரையாடிய நூர்ஹயாதி எனும் பெண்மணி இறுதிச் சந்திப்பு குறித்து இவ்வாறு விவ ரிக்கிறார் "எனது மகனுக்கு கோழி இறைச்சி கறியுடன் ரொட்டி என்றால் அலாதிப் பிரியம் அதனால் வீட் டிலிருந்தே மகனுக்கென விசேடமாக சமைத்து கொண்டு சென்றேன். ஒரு சில ரொட்டித் துண் டுகளை எனது கையால் நானே ஊட்டி விட்டேன் அவனும் விருப்பமாகக் காப்பிட்டான். சிறிது நேரம் உரையாடி விட்டு ஓடிச் சென்று தன் கைகளால் எழுதப்பட்டதுண்டுச் சீட்டொன்றைதந்தான் அதில் தான் மத்ரசா பாடசாலையில் மிகவும் சந்தோ ஷமாக இருக்கின்றேன். எதிர்காலத்தில் நான் ஒரு ஹாபிஸாக (குர்ஆனை மனனமிட்டவர்) வர விரும் புகின்றேன். அதன் மூலம் எங்கள் குடும்பத்தினரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வேன்' எனவும் எழு தப்பட்டிருந்தது.

மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் நாம் எமது மகனை இந்த மத்ரஸாவில் சேர்த்தோம் மகனின் கருகிய உடலைக் காணவா?"
மத்ரசா கட்டிடம் தீ அபாயம் குறித்த சட்ட நியமங்களை பேணியிருக்கவில்லை தீஅனர்த்தம் நிகழ்ந்த "தாருல் குர்ஆன் இத்தி பாக்கியாஹ்" மத்ரசா பாடசாலை அல்குர்ஆனை மனனமிட்ட மாணவர்களை உருவாக்குதல், இஸ் லாமிய நெறிமுறைகளை பயிற்றுவித்தல் நோக்கின் பொருட்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இஸ்லாமிய கல்வி நிலையமாகும் இக்கட்டிடத்தின் தகுதிகாண் அனுமதிப்பத்திரங்கள் கூட இன்னும் உரிய அதிகாரிகளினால் மேற்பார்வை செய்யப்பட்டிருக்கவில்லை.

தீ அபாயம் தொடர்பில் துரித தீயணைப்பு கருவி, உபகரணங்கள் எதையும் இக்கட்டிடம் கொண்டிருக்கவில்லை பாடசாலையில் புனர்நிர்மானப் பணிகள் நடை பெற்றுக் கொண்டிருப்பதால் ஆபத்துக் காலங் களில் அவசரமாக வெளியேறும் பொருட்டு அமைக்கப்படும் துரித வெளியேற்ற வாயிலை அடைத்தவாறு தடுப்புச் சுவர் ஒன்று தற்காலிகமாக எழுப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக தீ பரவ ஆரம்பிக்கும்போதே மாணவர்களால் துரிதமாக வெளியேற முடியாமற் போயுள்ளது.

இந்நிலையில் இக்கட்டிடத்தில், நிர்வாகம் தனது கல்விச் செயற்பாடுகளை தொடங்கியிருக்கக் கூடாது என குற்றம்சாட்டப்படுகிறது. பாடசாலை நிர்வாகம் மீது சட்டநடவடிக்கைகள் தொடரப்பட்டுள்ளதாக மலேஷியா பொலிஸ் உயரதிகாரி அமர்னாத்சிங் தெரிவிக்கின்றார் அல்குர்ஆனை மனனமிடல் தொடர்பாக 5-18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்கள் பயிலும் பதிவுசெய்யப்பட்ட519 மதரசாக்கள் மலேஷியாவில் இயங்கி வருகின்றன. மேலும் பதிவுசெய்யப்படாது பல மத்ரசாக்கள் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்லாமிய அலுவல்கள் அமைச்சின் கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகின்ற இவ்வகை மதரசா பாடசாலைகள் கல்வி அமைச்சினால் நெறிப்படுத்தப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

-ஹஸன் இக்பால்- விடிவெள்ளி 
மலேசியாவில் 21 மாணவர்களை பலிகொண்ட தீவிபத்து. கைதானவர்கள் தெரிவிக்கும் காரணம். மலேசியாவில் 21 மாணவர்களை பலிகொண்ட தீவிபத்து. கைதானவர்கள் தெரிவிக்கும் காரணம். Reviewed by Madawala News on 9/22/2017 03:12:00 PM Rating: 5