Ad Space avaiable

வதந்தியை அடுத்து திடீரென ஏற்பட்ட சனநெரிசலால், முச்சுத்திணறி 22 பேர் பலி.


மும்பையின் எல்ஃபின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்திலுள்ள மக்கள் நடைபாதை மேம்பாலத்தில்,  திடீரென ஏற்பட்ட சனநெரிசலால், முச்சுத்திணறி 22 பேர் பலியாகியுள்ளதுடன், குறைந்தது 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவத்தில், பலியானோரில் அதிகளவானோர் பெண்கள் எனக் கூறப்படுகிறது. மும்பையில் கனமழை பெய்து வரும் நேரத்தில் இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மின்கசிவு ஏற்பட்டதாகப் பரவிய வதந்தியையடுத்தே, இவ்வனர்த்தம் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றபோதும், “கனமழை பெய்ததால் இந்த நடைபாதை மேம்பாலத்தில் மழைக்காக ஒதுங்கியவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நடைபாதை மேம்பாலத்தின் தகரக்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் மக்களிடையே பீதியும் பரபரப்பும் ஏற்பட்டு முண்டியடித்துக் கொண்டு வெளியேற முயன்றதில் கடும் நெரிசல் ஏற்பட்டது” என்று பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

மூத்த அதிகாரிகள், ரயில்வே நிர்வாகிகள், ரயில்வே பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்ததுடன், காயமடைந்தவர்களிடம் இன்று வாக்குமூலம் சேகரிக்கப்பட்டுள்ளது.
வதந்தியை அடுத்து திடீரென ஏற்பட்ட சனநெரிசலால், முச்சுத்திணறி 22 பேர் பலி. வதந்தியை அடுத்து திடீரென ஏற்பட்ட சனநெரிசலால், முச்சுத்திணறி 22 பேர் பலி. Reviewed by Madawala News on 9/29/2017 02:25:00 PM Rating: 5