Ad Space avaiable

மாகாண சபை தேர்தலை 2 வருடங்களுக்கு இழுத்தடிப்பதே திட்டம் ?


நிலாம்டீன்  விசேட   செய்தி 

மாகாணசபை தேர்தல்கள் திருத்தச்சட்டம் 2/3 பெரும்பான்மையுடன் இன்று நிறைவேறியது! இதன் மூலம்  தேர்தல்கள் ஒத்திவைப்பு!


மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையிலான வரைவு நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள்சுயேட்சைக் குழுக்கள் தமது வேட்பாளர் பட்டியலில் குறைந்தபட்சம் 30 வீதத்தை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில்இந்த திருத்தச் சட்ட வரைவு அமைந்திருந்தது.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்துசிறிலங்கா அரசாங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்ட வரைவை முன்வைத்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் சட்டமா அதிபரின் அறிவுரை பெறப்பட்டு பிற்பகலில் அமர்வு ஆரம்பமானது.

இந்த திருத்தச்சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என்று சட்டமா அதிபர் ஆலோசனை கூறியிருந்தார்.

இதையடுத்துஇரண்டாவது வாசிப்பின் மீது நேற்றிரவு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்ட வரைவுக்கு ஆதரவாக, 157 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக 44 வாக்குகள் அளிக்கப்பட்டன. ஒருவர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஜேவிபிசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தொடர்ந்து மூன்றாவது வாசிப்பின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, 159 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். 37 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

இதன் மூலம் 122 மேலதிக வாக்குகளால் மாகாணசபைகள் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதன்  மூலமாக இம்மாத  இறுதியில்  கலையவுள்ள  கிழக்கு  வடமத்தி சப்ரகமுவா    ஆகிய   3    மாகாணங்களுக்கும்   தேர்தல்  நடக்காது  மாதங்களுக்கு   தேர்தல்  நடக்காது   என்று   சொல்லப்பாடாலும்  மாதம் இழுத்து இப்படியே  வருடங்களை  கடத்தி  இழுத்தடிப்பது  என்பதுதான்  அரசின்  மெகா   பிளான்.

ஆக    வருடத்திக்கு  தேர்தல்  இல்லை ..நாம்  ஏற்கனவே சொல்லப்பட்டது  போன்று  அரசின்  இந்த  திருத்த  மசோதாவுக்கு  ஹக்கீம் காங்கிரஸ்  மற்றும் தமிழ்  கூட்டமைப்பு  மனம்  விரும்பி  முழு அதரவு கொடுத்துள்ளது. 

எம்.எம்.நிலாம்டீன்  

மாகாண சபை தேர்தலை 2 வருடங்களுக்கு இழுத்தடிப்பதே திட்டம் ? மாகாண சபை தேர்தலை 2  வருடங்களுக்கு   இழுத்தடிப்பதே  திட்டம் ?  Reviewed by Madawala News on 9/21/2017 04:46:00 PM Rating: 5