Ad Space avaiable

மாகாண சபை தேர்தல் தொடர்பான திருத்த சட்ட மூலத்திற்கு மூன்றில் இரண்டு ..



கிழக்கு மற்றும் வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகள் எதிர்வரும் 26 ஆம் திகதி தானாகவே களைந்து விடும். தேர்தல்கள் புதிய தொகுதி முறையில் நடாத்தப்படும். 

தொகுதி முறையில் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு முஸ்லிம் பிரதிநிதித்துவம், மலையக பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படக்கூடிய வகையில் தொகுதி முறைகள் உருவாக்கப்படும். அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற வரை மாகாண சபை தேர்தல்கள் ஒத்திவைக்கப்படும்.தேர்தல் நடாத்தப்படுகின்ற வரை ஆளுனர் ஒவ்வொரு மாகாணத்தினுடைய நிர்வாகத்தையும் நடாத்துவார். 

கிழக்கு மாகாண சபை 26.09.2017 ஆம் நாள் நள்ளிரவு களைக்கப்பட்டவுடன் 27 ஆம் திகதியில் இருந்து மாகாணம் ஆளுனரின் அதிகாரத்தின் கீழ் இருக்கும். ஒரு வருட காலத்திற்கு பின்னர் தேர்தல்கள் தொகுதி முறையில் நடாத்தப்படும். ஒவ்வொரு பிரதேசத்திலும் மக்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப தொகுதிகளை பிரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறன. 
80 வீதம் தேர்தல் மூலமாகவும் பிரதிநிதித்துவம் கிடைக்காத கட்சிகளுக்கான பிரதிநிதித்துவம் 50 வீதமாகவும் 50 வீதம் தேர்தல் தொகுதி மூலமும் தெரிவு செய்யப்படும்.

தேர்தல் ஆணைக்குழு மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவினுடைய அறிக்கை 2/3 பெரும்பான்மையினால் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படும். எனவே 2/3 பெரும்பான்மை அங்கீகாரம் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் தேவைப்படுவதனால், சிறுபான்மை மக்களுடைய மற்றும் மலையக மக்களுடைய குறிப்பாக முஸ்லிம்களினதும் மலையக மக்களினதும் ஆதரவு ஆலோசனைகளை பெற்று அதன்பிரகாரமே இந்த தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்படும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு இது தொடர்பாக பிரதமர் அவர்களும் இன்று பாராளுமன்றத்தில் உறுதி மொழி வழங்கினார்.

தேர்தல் எல்லைகளை நிர்ணயிக்கும் ஆணைக்குழு சிறுபான்மையோரை திருப்திப்படுத்தாத வகையில் அமைந்தால், பிரதமர் தலைமையில் உடனடியாக இன்னும் ஒரு குழு நியமிக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் அக்குழு அதற்கான நிவாரணத்தை வழங்கும்.

நேற்று இரவு 08 மணி தொடக்கம் நள்ளிரவு 02 மணி வரையும் இன்று காலை 09 மணி தொடக்கம் பிற்பகல் 08 மணி வரையும் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பல தடவைகளும், பிரதமர் மற்றும் சட்டமா அதிபர், கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருக்கிடையில் பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இறுதியிலே ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஸாத் பதியுத்தீன், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேஷன், அமைச்சர் திகாம்பரம், அமைச்சர் ராதா கிருஷ்ணன், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் எல்லோரும் இரவு பகலாக செயற்பட்டு இறுதி வரையும் போராடி இந்த அம்சங்கள் முஸ்லிம்களினுடைய பிரதிநிதித்துவம் குறிப்பாக குருநாகல், அனுராதபுரம், கண்டி, மாவனல்ல, போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களினுடைய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எல்லை நிர்ணய ஆணைக்குழுவிலே உறுதிப்படுத்துவது என்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழு திருப்தி இல்லாத பட்சத்தில் அதற்கு இன்னும் ஒரு குழுவை பிரதமர் தலைமையில் நியமித்து அதன் மூலமாக அதற்கு பரிகாரம் காண்பது என்பது போன்ற பல்வேறுபட்ட அம்சங்களுடனையே இன்று முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் தலைமைகளும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த வாக்களிப்பிலே கலந்து கொண்டனர்.

-ஹம்ஸா கலீல்-
மாகாண சபை தேர்தல் தொடர்பான திருத்த சட்ட மூலத்திற்கு மூன்றில் இரண்டு ..  மாகாண சபை தேர்தல் தொடர்பான திருத்த சட்ட மூலத்திற்கு மூன்றில் இரண்டு .. Reviewed by Madawala News on 9/21/2017 12:42:00 AM Rating: 5