Yahya

சமூக ஊடகங்களைப்பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு! தேசிய சூரா சபையின் ஊடகத்துறைக்கான உப குழுவின்வேண்டுகோள்:28-09-2017

அண்மைக்கால சமூக ஊடகங்களிலான (Social Media) பலரது பொறுப்பற்ற செயற்பாடுகள்ஒருவகையான பதற்ற நிலையை அதிகரிப்பதாகஅமைந்துள்ளனஇதனை ஒழுங்குறக்கையாளாவிட்டால் நிலைமை தலைக்கு மேலேசெல்லும் அபாயம் இருக்கிறதுஇந்தவிடயத்தில் சமூக ஊடகங்கள் பொறுப்புடன்நடந்து கொள்ள வேண்டியதை  ஞாபகப்படுத்துகிறோம். 

அத்துடன் தற்போதைய சூழலில் சமூகஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள் பேணவேண்டிய சில வழிகாட்டல்களை தேசிய சூறாசபை முன்வைக்க விரும்புகிறது. 

 • சமூகத்தை ஒற்றுமைப்படுத்திஆக்கபூர்வமான செயற்பாடுகளில்ஈடுபடுத்துவதற்கு சமூக ஊடகங்களால்முடியும்இலங்கை முஸ்லிம் சமூகம் சமூகஊடகங்களை இன்னும் இந்தத் துறையில்போதுமானளவு பயன்படுத்தவில்லைஇந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தவெற்றிடத்தை நிரப்புவதற்கு சமூக ஊடகசெயற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும்.
 • இன, மத வேறுபாடுகளின்றி மனித நேயம்மனிதாபிமானத்துக்கு முதலிடம் அளிக்கவேண்டும்குரலற்றவர்கள் யாராகஇருந்தாலும் அவர்களுக்காக குரலெழுப்பவேண்டும்தனது இனத்துக்காக மட்டுமேகுரல் கொடுப்பது இஸ்லாம்அங்கிகரிக்காத இனவாதமாகும்.
 • எந்தவித செயற்பாடுகளின்போதும்அதுநீதிக்கானதாக இருந்தாலும் அதனூடாகஅதனை விடப் பெரிய தீமை விளையாமல்அவதானமாக இருக்க வேண்டும்.
 • நல்ல விளைவுகளைத் தராத எந்தச்செயற்பாடுகளும் வீணானவையேவீணானசெயற்பாடுகளில் ஈடுபடுவது முஃமினுடையபண்பு அல்லதான் முஃமின் என்பதைசமூக ஊடக செயற்பாட்டாளர்கள் தமதுசெயல்களுக்கூடாக நிறுவ வேண்டும்.
 • "உங்களில் ஒருசாரார் மீதுஉங்களுக்குள்ள பகை அவர்கள் மீது அநீதிஇளைப்பதற்கு உங்களைத்தூண்டாதிருக்கட்டும்என்ற இறைகட்டளைக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்அத்துமீறுபவர்களை அல்லாஹ்கண்டிக்கிறான்இஸ்லாத்தையும்முஸ்லிம்களையும் பாதுகாப்பதாகநினைத்து அல்லாஹ்வின் கட்டளைக்குமாறு செய்யும் நிலைக்கு சென்றுவிடக்கூடாது.
 • பெரும்பான்மை சமூகத்திலுள்ள சிலதீவிரவாதிகளின் செயற்பாடுகளைவிமர்சிக்கப் போய் அந்தச் சமூகத்தில்பெரும்பான்மையாகவுள்ளஆதரவாளர்களின் அரவணைப்பை இழந்துவிடக் கூடாதுஅதனால் பொதுவாகமொத்தச் சமூகத்தையுமே இழிவுபடுத்தும்வேலைகளை சமூக ஊடகங்கள் செய்யக்கூடாது.
 • ஒரு கல் எறியப்பட்டாலும் மொத்தக் கூடும்கலைந்து விடும் அபாயம் இருக்கிறதுஅந்த வகையில் கூட்டுப் பொறுப்புடன்செயற்பட வேண்டும்யாரும் தவறுதலாகசெய்யும் செயற்பாடுகளை அடுத்தவர்கள்உடனே முன்வந்து திருத்தி உதவி செய்யவேண்டும்.
 • எந்தவொரு விடயத்தையும்உணர்வுபூர்வமாக(Emotional)  அணுகுவதை தவிர்த்து அறிவுபூர்வமாகஅணுகுவதற்கு பழகிக் கொள்ள வேண்டும்ஓர் அறைக்குள் அமர்ந்து சமூகஊடகங்களில் உணர்வுபூர்வமாக அல்லதுஅடுத்தவர்களின் உணர்வுகளைத் தூண்டும்விதத்தில் பதிவுகளை பதிவேற்றம்செய்பவர்கள் அதனால் ஏற்படும் பாதகவிளைவுகளுக்கு பொறுப்புச் சொல்லவேண்டும்நாட்டுப்பற்றுள்ளசமூகப்பற்றுள்ள ஒரு முஸ்லிம் சமூகத்தைஆபத்தில் தள்ளிவிடும் முயற்சியைஒருபோதும் முன்னெடுக்கக் கூடாது.
 • முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படுகின்றபோதுவெறுமனே அரசியல் தலைவர்களைத்திட்டித் தீர்ப்பதனாலும் சமூகத்தலைமைகளைக்கொச்சைப்படுத்துவதனாலும் ஆகப்போவது ஒன்றுமில்லைஅவர்களுக்குஆலோசனை சொல்லும் வகையில்நிதானமாக நடந்து கொள்ள வேணடும்.
 • சிலபோது மிகவும் அசிங்கமான வார்த்தைப்பிரயோகங்களும் தூஷண வார்த்தைகளும்தனிநபர் தாக்குதல்களும் திட்டமிட்டுமேற்கொள்ளாப்படுகின்றனஇதனைப்பார்த்து ஆவேசப்படுட்டு நாமும்அநாகரிகமான வார்த்தைப்பிரயோகங்களைப் பயன்படுத்துவதைதவிர்க்க வேண்டும்எல்லாவற்றுக்குபதிலளிக்க வேண்டியபின்னூட்டமிடவேண்டிய தேவையில்லை என்பதைகவனத்திற் கொள்ள வேண்டும். 

அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானா!

சமூக ஊடகங்களைப்பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு! தேசிய சூரா சபையின் ஊடகத்துறைக்கான உப குழுவின்வேண்டுகோள்: சமூக ஊடகங்களைப்பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு! தேசிய சூரா சபையின் ஊடகத்துறைக்கான உப குழுவின்வேண்டுகோள்: Reviewed by Madawala News on 9/28/2017 08:50:00 PM Rating: 5